கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. லாக்-டவுன் 3 நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஒரு நாள் கழித்து கொரோனா வைரஸ் தொற்று, முன்பு இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 3900 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் அதிகபட்சமாக 195 பேர் இறந்துள்ளனர். செவ்வாயன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் 46433 ஆக அதிகரித்துள்ளன. மேலும் கோவிட் -19 தொற்றுக்கு 1568 பேர் இறந்துள்ளனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46433 பேரில் 32134 பேர் செயலில் உள்ளனர், அதே நேரத்தில் 12727 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மகாராஷ்டிரா:
கொரோனா வைரஸின் அதிகபட்ச அழிவை மகாராஷ்டிரா மாநிலம் கண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 17589 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனாவின் மொத்த பாதிப்பில் 14541 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2465 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்த மாநிலத்தில் இதுவரை 583 பேர் உயிர் இழந்துள்ளனர்.
டெல்லி:
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 6393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 4898 பேர் செயலில் உள்ளனர். இங்கு கோவிட் -19 தொற்றுநோயால் 64 பேர் இறந்துள்ள நிலையில், 1431 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம்:
மத்திய பிரதேசத்தின் கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 3905 ஆக உயர்ந்துள்ளது. இதில் 165 பேரும் இறந்துள்ளனர். மேலும் 798 பேர் குணமாகியுள்ளனர்.
குஜராத்:
மகாராஷ்டிராவுக்குப் பிறகு குஜராத் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குஜராத்தில் இதுவரை 7318 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. குஜராத்தில், கொரோனா வைரசால் 319 பேர் இறந்துள்ளனர். மேலும் 1195 பேர் குணமடைந்துள்ளனர் அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் 4990 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 3550 பேர் செயலில் உள்ளனர். இந்த தொற்றுநோயால் இங்கு 31 பேர் இறந்துள்ளனர். 1409 பேர் முழுமையாக குணமாகியுள்ளனர்.
ஆந்திரா:
ஆந்திராவில் இதுவரை 2210 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 524 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கு 36 இறப்புகளும் நடந்துள்ளன.
பீகார்:
பீகாரில் இதுவரை 662 கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது. பீகாரில் கொரோனா வைரஸ் காரணமாக 4 பேர் இறந்துள்ள போதிலும், 130 பேர் குணமாகியுள்ளனர்.
உத்தரபிரதேசம்:
உ.பி.யில் கொரோனா வைரஸ் 3618 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், இவர்களில் 802 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். 50 பேர் இறந்துள்ளனர்.
ராஜஸ்தான்:
இதுவரை 4532 கொரோனா வைரஸ் நோயாளிகள் இங்கு பதிவாகியுள்ளனர். 77 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 1394 பேர் குணமாகியுள்ளனர்.
மேற்கு வங்கம்:
வங்காளத்தில் இதுவரை 1610 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதில் 133 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 218 பேர் குணமாகியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக