Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

செங்கல்பட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்தம் 416ஆக உயுர்வு !






செங்கல்பட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்தம் 416ஆக உயுர்வு.

தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரேனா உறுதி செய்யப்பட்டுள்ளதுஇதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 5262ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் செங்கல்பட்டில் மொத்தம் பாதிப்பு 416ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில் 345 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக