Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

சென்னை டூ டெல்லி சிறப்பு ரயில்: ஆரோக்ய சேது இல்லைனா அனுமதி இல்ல!

 railway














சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல் நாடெங்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை சென்னையிலிருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில் ஒன்று புறப்படுகிறது. பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு ரயில் புறப்படும்.

இந்நிலையில் சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி

சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ய எண்ணினால் 24 மணி நேரத்திற்கு முன்னதாக செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகையில் இருந்து 50% மட்டுமே திரும்ப கிடைக்கும்.

மருத்துவ பரிசோதனை செய்வதற்கு வசதியாக ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் நிலையங்களுக்கு வந்துவிட வேண்டும்

ரயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்., முகக்கவசம் அணிவதும், சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவுவதும் அவசியம்.

வழக்கமாக ஏசி பெட்டிகளில் வழங்கப்படுவது போல போர்வைகள் வழங்கப்படாது. பயணிகள் தேவையானவற்றை வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், உணவு வழங்கப்படும்

சிறப்பு ரயில்களில் பயணிக்கும் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை தங்கள் மொபைலில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பயணிக்கும் முன்னர் பதிவேற்ற அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக