வியாழன், 14 மே, 2020

5-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம். ஒருவர் ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த நபரிடம் ஆலோசனை கேட்க பலரும் காத்திருப்பார்கள்.

அந்த நபர் மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயக்கலைகள், கைகடிகாரம், மோட்டார் தொழில்நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார்.

நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்புகளுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் இரத்தம் உறைவதும், இரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார்.

லக்னத்தில் 5-ம் இடத்தில் புதன் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பதவி, மரியாதை கிடைக்கும்.

5ல் புதன் இருந்தால் என்ன பலன்?

👉 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.

👉 சமூக பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

👉 அரசு தொடர்பான காரியங்களில் லாபம் உண்டாகும்.

👉 பெரியோர்களின் ஆதரவுகள் கொண்டவர்கள்.

👉 கவிதைகளில் ஆர்வம் உடையவர்கள்.

👉 தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.

👉 ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உடையவர்கள்.

👉 அலங்காரத்தில் விருப்பம் உடையவர்கள்.

👉 சாதுர்யமான செயல்பாடுகளை உடையவர்கள்.

👉 வேடிக்கையான பேச்சுக்களை கொண்டவர்கள்.

👉 அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.

👉 மற்றவர்களை கவரும் செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 அரசியல் தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்