Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 மே, 2020

2-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ஜோதிடத்தில் புதனை வித்தைக்காரர்கள் என்று கூறுவர். எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்களுக்கு புதன் திசை நடக்கும்போது உலகமே போற்றக்கூடிய வளர்ச்சி கிடைக்கும்.

உலகப் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். ஜாதகத்தில் புதன் நன்றாக அமையப் பெற்ற ஜாதகர், எந்தத் துறையில் இருந்தாலும், புதன் திசை நடக்கும்போது அந்த துறையில் பல அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றம் அடைவார்.

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எந்தவொரு சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவின் மூலமாக தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார்.

லக்னத்திற்கு 2-ம் இடத்தில் புதன் அமர்ந்தால் அந்த ஜாதகக்காரர் திறமையான பேச்சுக்களை உடையவர்கள்.

2ல் புதன் இருந்தால் என்ன பலன்?

👉 புத்திர பாக்கியம் உடையவர்கள்.

👉 மன உறுதி கொண்டவர்கள்.

👉 நற்குணம் கொண்டவர்கள்.

👉 செல்வ வளம் உடையவர்கள்.

👉 சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

👉 உறுதியான சிந்தனை கொண்டவர்கள்.

👉 சுயமாக சம்பாதிக்கும் திறமை உடையவர்கள்.

👉 இவர்களுடைய பேச்சுக்கு மதிப்பு இருக்கும்.

👉 எதிலும் சிக்கனமாக இருப்பார்கள்.

👉 மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காதவர்கள்.

👉 மத சடங்குகள் பற்றிய அறிவு உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக