Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

வருமான வரி கணக்கு செலுத்த மேலும் 3 அவகாசம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 income tax









ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் அல்லது ஜூலை மாதம் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

நேற்று செய்தியாளர்களிடையே பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு சலுகைகளையும் அறிவிப்புகளையும் அறிவித்த நிலையில் தற்போது மேலும் ஒரு சலுகையாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். .

இதனையடுத்து வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரி செலுத்துபவர்கள் தங்களுடைய 2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகை வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்தி கொள்ளலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான வரி செலுத்துபவர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக