>>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 15 அக்டோபர், 2019

    சனி பகவானைப் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள் !!

    Image result for சனி பகவானை
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



     நவகிரகங்களில் சுக்கிரனுக்கு அடுத்தபடியாக வருபவர் தான் சனி பகவான். இவர் வாழ்க்கையில் உள்ள இன்பம் மற்றும் துன்பங்களை அவரவரின் கர்ம வினைக்கு ஏற்ப வழங்கக்கூடியவர்.

     சனி பகவான் நமக்கு எவ்வளவு துன்பம் அளிக்கிறாரோ அந்த அளவிற்கு இன்பங்களையும் கொடுக்கக்கூடியவர்.

     சனி பகவான் உலகிலுள்ள எல்லா வகை துன்பங்களையும் அனுபவிக்க வைத்து, நம்மை சிறந்த அனுபவசாலியாகவும், துன்பப்படுவோருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் மாற்றி எக்காலத்திலும் நம் பெயரை நிலைநாட்டக் கூடியவர்.

     அனுபவ கல்வியை அளித்து, உலகம் என்னவென்றும், உறவுகள், நண்பர்கள் யார் யார் எனவும் தெளிவுப்படுத்தக்கூடிய ஆற்றலை கொண்டவர் சனி பகவான்.

    சனி பகவானுக்குரிய மலர் = கருங்குவளை

    சனி பகவானுக்குரிய தானியம் = எள்

    சனி பகவானின் வாகனம் = காகம்

    சனி பகவானின் நவரத்தினம் = நீலக்கல்

    சனி பகவானுக்குரிய ஆதிக்க எண் = 8

    சனி பகவானின் அதிதேவதை = எமன், ஆஞ்சநேயர்

    சனி பகவானின் வடிவம் = வில் வடிவம்

    சனி பகவானின் இயல்புகள் :

     சனிபகவான் பனி சூழ்ந்த அதிக குளிர்ச்சியடைந்த கிரகம் ஆகும்.

     இவர் உயிரினங்களின் ஆயுளுக்கு அதிபதியாவார்.

     உயிரினங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு இவரே காரகர்.

    சனி பகவானின் புராணமும், வரலாறும் :

     சூரியன் சமுக்ஞை(உஷாதேவி), பிரபை, ரைவத இளவரசி ஆகிய மூன்று மனைவிகளை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களில் சமுக்ஞையிடம் அதிக பிரியம் கொண்டு இருந்தார். முதல் மனைவியான சமுக்ஞை பட்டத்து ராணியாக திகழ்ந்தார்.

     சூரியனுக்கும், சமுக்ஞைக்கும் வைவ சுதமனு, எமன் ஆகிய 2 மகன்களும், யமுனை என்னும் மகளும் பிறந்தனர். சூரியனிடம் வெப்பத்தை குறைத்துக் கொள்ளும்படி பலமுறை சமுக்ஞை சொல்லியும் சூரியன் குறைத்துக் கொள்ளவில்லை.

     ஒரு நிலையில் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேற எண்ணிணார் சமுக்ஞை. தான் இல்லாத இடத்தைப் பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய நிழலைக் கொண்டு தன்னைப் போன்ற ஒரு பெண்ணை படைத்தார். அந்த பெண்மணியே சாயாதேவி ஆவார்.

     சமுக்ஞை, சாயாதேவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு தன் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார். ஆரம்பத்தில் எந்த ஒரு வித்தியாசமும் இன்றி சூரியனிடமும், சமுக்ஞையின் பிள்ளைகளிடம் உண்மையான மனைவி மற்றும் தாயாக நடந்துக் கொண்டாள்.

     நாளடைவில் சூரியனுக்கும், சாயாதேவிக்கும் சாவர்ணி, சனி என்ற பிள்ளைகளும், தபதி, விஷ்டி என்ற பெண்களும் பிறந்தனர். தன் பிள்ளைகளிடம் அதிக அன்பை காட்டிய சாயாதேவி, சமிக்ஞையின் பிள்ளைகளிடம் மாற்றான் தாய் போல் நடந்து கொள்கிறார்.

     இங்கு நடந்த எல்லாவற்றையும் எமன் அறிந்திருந்தாலும் சாயாதேவியிடம் எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்தார். ஒரு சூழ்நிலையில் சாயாதேவிக்கும், எமனுக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

    சூரியனின் மீது சனி பகவானுக்கு கோபம் ஏற்படக்காரணம்? :

     வாக்கு வாதத்தின் போது எமன் சாயாதேவியை கீழே தள்ளி உதைத்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த சனி எமனிடம் இதை கேட்க, எமன் தன்னிடம் இருந்த கஜாயுதத்தால் சனியின் கால்களை அடித்தார். இதைக் கண்ட சாயாதேவி தன் மகனை அடித்த மற்றும் தன்னை உதைத்த எமனின் கால்கள் அழுகிப் போகட்டும் என சாபமிட்டாள்.

     சாயாதேவியின் சாபத்திற்கு ஏற்ப எமனின் கால்கள் அழுகத் தொடங்கின. அழுகிய காலுடன் எமன் சூரியனை காண சென்றார். சூரியனும் எமனின் நிலையை கண்டு நடந்தது என்ன எனக் கேட்டார். எமன் அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சூரியனிடம் கூறினார்.

     எமனின் மூலம் எல்லா நிகழ்வுகளையும் அறிந்த சூரியன் அனைத்து பிரச்சனைகளையும் நல்ல முறையில் நிறைவு செய்து சமுக்கையுடனும், நிழல் தேவியான சாயாதேவியுடனும் இல்லற வாழ்க்கை நடத்தினார்.

     இருப்பினும் சாயாதேவியின் வாரிசுகளுக்கு சரியான தந்தையாக நடந்து கொள்ளவில்லை. இதனால் சனிபகவான், தன் தந்தையான சூரியனை வெறுத்து அவரை பகைவராக எண்ணினார்.

     தன் தந்தை தனக்கு சரியான வழிகாட்டியாக இல்லாத போதும் சனிபகவான் தன் சொந்த முயற்சியால் கடுந்தவம் புரிந்து நவகிரக பரிபாலனத்தில் சிவபெருமானின் அருளால் இணைந்தார்.

     மேலும் சனீஸ்வரர் என்னும் பெயருக்கு உரியவராக சிவபெருமானின் அம்சமாகவே இருந்தார். நவகிரக பரிபாலனத்தில் இணைந்தாலும் ஆதவனான சூரியன் மீது பகைக் கொண்டவராகவே இருந்தார்.

    சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் :

     ஒரு சமயம் சனிபகவானின் பார்வை பலத்தால் விநாயகர் தலை இழந்து ஆனை முகம் எடுக்கும் நிலை உருவானது.

     மனிதர்களான நளன் என்னும் அரசன் சனிபகவானின் பாதிப்பால் தன் நாட்டை இழந்து மனைவி மற்றும் மக்களை பிரிந்து நாடோடியாக வாழ்ந்து பல சோதனைகளை கடந்து, இறுதியில் அதற்கான மறு பலனான சித்தி என்னும் உன்னத நிலையை அடைய வழிகாட்டினார்.

     இராவணன் வீழ்ச்சி, பாண்டவர் வனவாசம் சென்றது மற்றும் பிரம்மா சிறைப்படக் காரணமான நிகழ்வுக்கு காரணம் சனித்தேவர் ஆவார்.

     இவர் தேவர் என்றும், அரக்கர் என்றும் தன் பலனை இடத்திற்கு இடம் மாற்றாமல் எல்லா இடங்களிலும் ஸ்திர தன்மையுடன் நடந்து கொள்ளும் நீதிமான்.

    சனியால் ஏற்படும் பாதிப்புகள் :

     இராசிக்கு இரண்டில் சனி இருப்பின் பூர்வீக சொத்துகளால் பலன்கள் கிடைக்காது.

     லக்னத்துக்கு ஏழில் சனி இருப்பின் காலதாமதமான திருமணம் நடைபெறும்.

     லக்னத்துக்கு பத்தில் சனி இருந்தால் சுயதொழிலில் போராட்டமான சூழல் அமையும்.

    பரிகாரங்கள் :

     திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

     காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் சனியால் ஏற்படும் வினைகளின் வீரியம் குறையும்.

    கறந்த நாட்டு பசுவின் பாலை சனிக்கிழமைத்தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும்.

    பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக