இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மதுரையின் மினி குற்றாலம் என்றழைக்கப்படும் குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
சிறுமலையில் உற்பத்தியாகி நீரோடையாய் அடர்ந்த மரங்களின் மீது விழுந்து, மூலிகை சக்தியுடைய நீர்வீழ்ச்சியாக மிக உயர்ந்த இடத்தில் இருந்து அருவியாய் கொட்டுகிறது.
சிறப்புகள் :
மதுரை மாவட்டத்தில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் அதிகம் அறியப்படாத குளு குளு இடம்தான் இது...
குற்றாலம் அருவியை நகல் எடுத்தது போல, பாறைகளில் பால் வெண்மை நிறத்தில் பாய்ந்து வருவது தனி அழகு...
அருவிக்கு அருகே வந்துவிட்டாலே நம்மை வரவேற்பது சாரலும், குதித்து விளையாடும் குரங்குக் கூட்டமும்தான்...
கண்ணுக்குக் குளிர்ச்சியாய் விரிந்து பரவியுள்ள சிறுமலையின் சரிவில், வழிந்தோடி வரும் தண்ணீர்...
அடர்ந்த பசுமையான சிறுமலைக் காடுகளில் இருந்து இயற்கை நீரூற்றாய் வரும் அற்புத அருவி...
பசுமை சூழ்ந்த காடுகளில் இருந்து வழிந்தோடி வரும் இயற்கை மூலிகைக் குளியல்...
மலையடிவாரத்தில் இருந்து பார்த்தாலே பசுமையான வனத்துக்குள் பாறையில் குதித்து இறங்கும் நீர்வீழ்ச்சியின் சத்தம் இசையை கேட்பது போல காதுக்கு இனிமை...
அடர்ந்த சிறுமலைக் காடுகளுக்குள் புகுந்து அருவிக்குச் செல்லும் வழியெங்கும் நம்மை வியப்படையச் செய்யும் அமைதியான சூழலும், அருவியின் குளிர்ச்சியும், பசுமையான மலைகளும்...
அருவிக்குளியல் மட்டுமில்லாமல், ஆற்றுக் குளியலுக்கும் ஏற்றபடி பாறைகளில் குதித்து ஓடி வரும் அருவி நீரோடையாய் பாய்ந்து வருகிறது...
அண்ணாந்து பார்த்தால் மேகக்கூட்டத்தை தொட்டுவிட்டு கீழே இறங்குவதுபோல் இருக்கும் அருவி...
இந்த அருவியின் அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.
எப்படி செல்வது?
மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 38கி.மீ. தொலைவிலும், குட்லாடம்பட்டியிலிருந்து 5கி.மீ. தொலைவிலும், வாடிப்பட்டியிலிருந்து 10கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
அருவிக்குச் செல்ல மதுரையிலிருந்தும், வாடிப்பட்டியில் இருந்தும் பஸ், ஆட்டோ, வேன் வசதி உண்டு.
எப்போது செல்லலாம்?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக