தென் ஆப்ரிக்காவில் ஊரடங்கு காரணத்தால் ஒரு வேளை உணவிற்கு தவித்து வந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்ட அரசு, தனியார் அமைப்புகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம்.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சுமார் 22 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல நாடுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவு இதுவரை 34,01,190 பேர் பாதிக்கப்பட்டு, 2,39,604 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவு காரணமாக பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு, மக்கள் தங்கள் வேலைகளையும், வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் ஏழை மக்கள் தவித்து வருகின்றனர்.
சீனா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா நாட்டிலும் பரவி வருகிறது. அந்நாட்டில் 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 116 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் தென் ஆப்ரிக்காவில் மார்ச் 27ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வருமானம் இழந்து ஒரு வேளை உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் சென்சூரியன் என்ற பகுதியில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவந்த மக்களுக்கு அரசு, தனியார் அமைப்புகளும் சேர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த தகவல்களை அறிந்து உணவுகளை வாங்க அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். மக்கள் கூட்டம் குவிந்ததால் அவர்கள் அனைவரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர்களுக்கு நீண்ட வரிசையில் நின்ற மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். இந்த நிகழ்வை டூரோன் கேமரா மூலம் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதனை இணையத்திலும் வெளியிட்டு, மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக