ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட திருப்பதி கோவிலுக்கு ரூ.400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள வழிபாட்டு தளங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தான் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மக்கள் அதிகமாக கூடுகிற வழிபாட்டு தலங்களில் ஒன்று திருப்பதி. இந்த கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மக்கள் வந்து போவதுண்டு. எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதி கோவில், தற்போது ஊரடங்கு உத்தரவால் வெறிசோடி காணப்படுகிறது.
ஒரு ஆண்டிற்கு தேவஸ்தானத்தின் செலவு ரூ.2500 கோடி. ஒவ்வொரு ஆண்டும், அங்கு பணி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.1300 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும், வங்கிகளில் 8 டன் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில் பல கோடி வருவாயுடன் இயங்கி வருகிற நிலையில், தற்போது இந்த ஊரடங்கு காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால், ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் இழப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நிதி சுமையை சமாளிக்க பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களிடமும், தேவஸ்தான தொடர்புடைய கல்வி நிறுவனங்களிடமும் இருந்து நிதியை பெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக