தனித்தனியே எதுக்கு., இதோ Airtel குடும்ப திட்டங்கள்: அல்டிமேட் டேட்டா., 20% பணம் மிச்சம்!
புதிய பொடியன்
திங்கள், மே 11, 2020
ஏர்டெல் தனது
வாடிக்கையாளர்களுக்கு குடும்ப போஸ்ட் பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த
திட்டத்தில் அல்டிமேட் டேட்டா வழங்குவதோடு 20 சதவீதம் பணம் மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிப்
போட்டுக் கொண்டு சலுகைகள்
பல்வேறு சலுகைகளை
அறிவித்து வருகின்றன இந்தியாவில்
உள்ள டெலிகாம் நிறுவனங்கள் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு
சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள்
பெற்று வருகின்றன.
ஏர்டெல்
குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
பாரதி ஏர்டெல்
தற்போதுள்ள சந்தாதாரர்களுக்கு ‘ஏர்டெல் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்' வழங்குகிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் ரூ.749 முதல் ரூ.1,599 வரையிலான விலையில் கிடைக்கின்றன.
இந்த திட்டங்களின் சில அடிப்படை நன்மைகள் குறித்து பார்க்கையில் வரம்பற்ற தேசிய ரோமிங்
மற்றும் வரம்பற்ற தேசிய அழைப்பு வசதியை வழங்குகின்றன.
அமேசான்
பிரைம் வீடியோ, ZEE5 பிரீமியம்
ஏர்டெல் குடும்ப
போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் மேலும் சில அனுபவிக்கக்கூடிய நன்மைகள் குறித்து பார்க்கையில்
அமேசான் பிரைம் வீடியோவின் ஒரு வருடத்திற்கான இலவச சந்தா, ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கும்
ZEE5 பிரீமியம் உறுப்பினர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் உறுப்பினர்
ஆகிய வசதிகளையும் வழங்குகிறது.
குடும்ப
போஸ்ட்பெய்ட் திட்டங்கள் சலுகை
ஏர்டெல் அறிவித்துள்ள
இந்த குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள் சலுகையின் கீழ் வழங்கும் அனைத்து திட்டங்களின்
விரிவான தகவல்களை பார்ப்போம். இந்த திட்டத்தை தொடங்குவதன் மூலம் ஏர்டெல்லின் நோக்கம்
குடும்பங்கள் தனித்தனியாக திட்டங்களைத் தேர்வு செய்யாமல் பணத்தைச் சேமிக்க உதவுவதாகும்.
பணத்தில்
20% வரை சேமிக்க முடியு
இந்த திட்டத்தைப்
பயன்படுத்தி வரும் குடும்பங்கள் மொபைல் தரவுகளில் தங்கள் பணத்தில் 20% வரை சேமிக்க
முடியும் என்று ஏர்டெல்லின் வலைத்தளம் கூறுகிறது. இது ஒரு போஸ்ட்பெய்ட் திட்டம் என்றாலும்
இதன்மூலம் மொத்த குடும்பம் ஒரே பில் கீழ் வருவதற்கான நல்ல வாய்ப்பாகும்.
ஏர்டெல்
குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ .749:
ஏர்டெல் ரூ.749-ன்
விலையில் இந்த திட்டம் கிடைக்கிறது. இதன் நன்மைகள் என்னவென்று பார்ப்பதற்கு முன்னதாக
இந்த திட்டம் மலிவு விலையில் கிடைக்கும் திட்டம் என்பதை சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
ஏனென்றால் இந்த திட்டத்தில் 125 ஜிபி வரை டேட்டா வழங்குகிறது. இந்த திட்டமானது முதல்
பயனர், இரண்டாவது பயனர் மற்றும் இரண்டு கூடுதல் பயனர்கள் என மூன்று வகையான இணைப்பை
செய்யலாம். இந்த திட்டமானது முதன்மை பயனரிடம் இருந்து தரவை பிரித்துக் கொள்ள திட்டம்
அனுமதிக்கிறது.
ரூ.999.,
ஏர்டெல் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
இந்த திட்டமானது
நான்கு குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தை முதன்மை
உறுப்பினரோடு சேர்த்து ஐந்து பேரோடு சேர்த்து இணைக்கலாம். ஐந்து இணைப்புகளோடு சேர்த்து
மொத்தம் 150 ஜிபி டேட்டாவை பயன்படுத்தப்படலாம். மூன்று வழக்கமான துணை நிரல்கள் மற்றும்
ஒரு தரவு துணை நிரல் உட்பட மொத்தம் நான்கு துணை நிரல்கள் வழங்கப்படும். இந்த திட்டத்தின்
விலை ரூ.999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.999.,
ஏர்டெல் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்
இந்த திட்டமானது
நான்கு குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தை முதன்மை
உறுப்பினரோடு சேர்த்து ஐந்து பேரோடு சேர்த்து இணைக்கலாம். ஐந்து இணைப்புகளோடு சேர்த்து
மொத்தம் 150 ஜிபி டேட்டாவை பயன்படுத்தப்படலாம். மூன்று வழக்கமான துணை நிரல்கள் மற்றும்
ஒரு தரவு துணை நிரல் உட்பட மொத்தம் நான்கு துணை நிரல்கள் வழங்கப்படும். இந்த திட்டத்தின்
விலை ரூ.999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ
.1,599-க்கு கிடைக்கும் ஏர்டெல் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்:
இது ஒரு குடும்ப
போஸ்ட்பெய்ட் திட்டமாகும் இந்த திட்டத்தில் நாம் ஏணைய தரவுகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த திட்டத்தில் பயணர்களுக்கு FUP வரம்புகள் எதுவும் இல்லை. இது முதன்மை மற்றும்
இரண்டாம் நிலை பயனர் இருவரும் தங்களை வரம்பற்ற தரவைப் பெற முடியும். ரூ .1,599 விலையில்
வேகமான 500 ஜிபி டேட்டா தரவை இதில் பயன்படுத்தலாம்.
ஒரு
நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
இந்த மூன்று
திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம்
உறுப்பினர், ZEE5 பிரீமியம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஹேண்ட்செட்
பாதுகாப்பு என பல்வேறு நன்மைகளுடன் வந்துள்ளன.
ஏர்டெல்
ஸ்மார் கூடுதல் தரவு நன்மைகளை வழங்குகின்றன
உங்கள் FUP வரம்பு
தீர்ந்துவிட்டால், கூடுதல் தரவை வாங்க பாரதி ஏர்டெல் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள்
வாங்கக்கூடிய இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் உள்ளன. முதல் விலை ரூ .100, இது
15 ஜிபி 3 ஜி / 4 ஜி தரவை வழங்குகிறது, இரண்டாவது ஸ்மார்ட்பைட் பேக் ரூ.200 செலவாகும்
மற்றும் 35 ஜிபி கூடுதல் தரவு நன்மையை வழங்குகிறது.
இந்த
திட்டத்தில் பல்வேறு நன்மைகள்
இந்த திட்டத்தைப்
பயன்படுத்தி வரும் குடும்பங்கள் மொபைல் தரவுகளில் தங்கள் பணத்தில் 20% வரை சேமிக்க
முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் zee5 சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் என பல்வேறு நன்மைகள்
வழங்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே தேங்கியிருக்கும் நேரத்தில்
இந்த போஸட்பெய்ட் திட்டங்கள் பெரிதும் பயன்படுத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக