இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை
நிறுவனமான காக்னிசென்ட், கடந்த ஒரு வருடமாக செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின்
செயல் திறனை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில்
மிகமுக்கியமாக தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை
மும்முரமாக செய்து வருகிறது.
கொரோனா பாதிப்பின் காரணமாக புதிய
வர்த்தகம் இல்லாமல் ஐடி நிறுவனங்கள் தவித்து வரும் அதே நிலையில், ஊழியர்களை
பணிநீக்கம் செய்ய கூடாது என்ற குறிக்கோளோள் உடன் பெரும் நிறுவனங்கள் உள்ளது. ஆனால்
காக்னிசென்ட் இந்த இக்கட்டான சூழ்நிலையில் 400 உயர் அதிகாரிகளை பணிநீக்கம்
செய்வதாக அறிவித்துள்ளது.
காக்னிசென்ட் நிறுவனத்தின் இந்த
அறிவிப்பு சக ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
400 ஊழியர்கள்
காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக
Brian Humphries பதவியேற்றிய நாளில் இருந்து ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம்
செய்யப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்
இக்காலக்கட்டத்தில் directors, senior directors, associate vice-presidents
(AVPs), VPs மற்றும் SVP பதவிகளில் இருக்கும் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய
உள்ளதாக அறிவித்துள்ளது சிடிஎஸ் நிர்வாகம்.
2 வருடம் முன்
Brian Humphries உயர் மற்றும் நடு
மட்ட பணிகளில் அதிகளவிலான ஊழியர்கள் இருந்தால், பல்வேறு வர்த்தக பிரச்சனைகள் வரும்
என நினைக்கிறார். இதன் காரணமாக தான் 2 வருடத்திற்கு முன்பு directorபதவி மற்றும்
சில குறிப்பிட்ட பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் 200 பேர் பணிநீக்கம்
செய்யப்பட்டனர். இதேபோல் கடந்த வருடம் 400 ஊழியர்களை voluntary separation scheme
பணியில் இருந்து அனுப்பப்பட்டனர்.
வெளியேற்பு சம்பளம்
இந்நிலையில் கடந்த சில வருடத்தில்
ஊழியர்கள் வெளியேற்றப்படும் போது கொடுக்கப்படும் வெளியேற்பு சம்பளம் (severance
package) 20 வாரத்தில் இருந்து 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதோடு ஒவ்வொரு வருட
பணிக்கு கூடுதலாக 1 வார சம்பளம் கொடுக்கப்பதாக சிடிஎஸ் நிர்வாகம் ஊழியர்களுக்கு
அறிவித்துள்ளது.
சிடிஎஸ்
உலகம் முழுக்க இருக்கும் எங்களது
வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க சிடிஎஸ் நிறுவனத்தில் சுமார் 2.9 லட்சம் பேர
பணியாற்றுகிறார்கள். ஆனால் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை குறைக்க வேண்டியது
அவசியமாக இருப்பதால் ஊழியர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அவசியமாக உள்ளது.
மேலும் supply மற்றும் demand அளவிட்டை உறுதி செய்ய பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை
சரியான முறையில் பயன்படுத்தும் பணியை முக்கியமானதாக கருதி பணியாற்றி வருகிறோம் என
சிடிஎஸ் தெரிவித்துள்ளது.
140 மில்லியன் டாலர்
2019ஆம் ஆண்டில் மட்டும் ஊழியர்கள்
பணிநீக்கம் மூலம் சுமார் 140 மில்லியன் டாலர் பணத்தை சிடிஎஸ் சேமித்துள்ளது. ஆனால்
ஒரு ஊழியர்கள் பணிநீக்கும் செய்யப்படும் போது பல்வேறு செலவுகளை செய்ய
வேண்டியுள்ளது என சிடிஎஸ் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது பணிநீக்கம்
செய்யப்படும் 400 ஊழியர்களில் எத்தனை பேர் இந்திய வர்த்தகத்தில் இருந்து
பணிநீக்கம் செய்யப்பட போகிறார்கள் என்ற விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக