இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்னுடன் இருக்கும் புகைப்படத்தை
வெளியிட்டுள்ளார்,
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர்
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு
ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக
எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும்
விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல்
செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது.
இந்த நிலையில் விஜய் மாஸ்டர் படத்தில்
நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததகா விஜய் யாருடன் இணையப்போகிறார் என்று
ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள், இந்த நிலையில் இயக்குனர் அட்லீ தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்னுடன் இருக்கும் புகைப்படத்தை
வெளியிட்டுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் பிகில் கூட்டணி இணையப்போகிறது
என்று தகவலை பரப்பி வருகின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக