Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 மே, 2020

45 நிமிடத்தில் 5 லட்சம் கடன்.. இஎம்ஐ 6 மாதம் கழித்து செலுத்தினால் போதும்.. எஸ்பிஐ அதிரடி சலுகை..!

கொரோனா காரணமாக ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்கள் தான். ஏனெனில் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கும் அவர்கள், அத்தியாவசிய தேவைக்கே கூட அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவசரக் கடன்

இருப்பினும் ஏதாவது ஒரு காரணத்துக்காக உங்களுக்கு பணம் அவசரமாக தேவைப்படுகிறதா? உங்களுக்கு இந்த அவசர காலத்திற்கு உதவுவதற்கேற்ப ஒரு அவசர கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது எஸ்பிஐ-யின் SBI Emergency Loan Scheme தான். இந்த திட்டத்தில் வெறும் முக்கால் மணி நேரத்தில், அதாவது 45 நிமிடத்தில் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

6 மாதம் கழித்தே இஎம்ஐ ஆரம்பம்

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள இந்த அவசர கடன் திட்டத்தில், இன்னும் என்னென்ன சலுகைகள் எல்லாம் வழங்கப்படுகிறது வாருங்கள் பார்க்கலாம். வெறும் 45 நிமிடத்தில் இந்த கடனை பெற முடியும் என்பது தான் சிறப்பான விஷயமே. அதிலும் இந்த நிதி நெருக்கடியான காலத்திற்கு ஏற்ப 5 லட்சம் வரை பெற்றுக் கொள்ள முடியும். இது எல்லாவற்றையும் விட, இந்த கடனுக்கான இஎம்ஐ தொகை 6 மாதம் கழித்தே ஆரம்பிக்குமாம்.

எவ்வளவு வட்டி விகிதம்?

இந்த எஸ்பிஐ அவசர கடன் திட்டத்தில் வட்டி விகிதம் 10.5 சதவீதமாகும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மற்ற தனி நபர் கடன் களை விட வட்டி குறைவு தான். இந்த அவசர கடன் திட்டமானது நிதி நெருக்கடியில் இருக்கும் எஸ் பி ஐ வாடிக்கையாளர்களுக்கு சற்று நிவாரணத்தினை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இது அவசர கடனிற்கு எஸ்பிஐ-யின் யோனோ ஆப் மூலமும் அப்ளை செய்து கொள்ள முடியும். ஆக நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே, வங்கிக் கிளைக்கு செல்லாமல், வெறும் 45 நிமிடங்களில் இந்த கடனினனை பெற முடியும். இதன நீங்கள் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும்.

எனக்கு கடன் கிடைக்குமா? என்ன தகுதி?

எஸ்பிஐ-யின் இந்த அதிரடி சலுகையை பெற உங்களுக்கும் விருப்பம் உள்ளதா? அப்படி எனில், உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 567676 என்ற எண்ணுக்கு PAPL என்று டைப் செய்து உங்களது எஸ்பிஐ வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இதைச் தெரிந்து கொள்ள முடியும்.

எப்படி இந்த கடனுக்கு விண்ணப்பிப்பது?

எஸ்பிஐ-யின் இந்த அவசர கடன் திட்டத்திற்கு SBI's YONO App மூலம் விண்ணபிக்கலாம். உங்களது ஸ்மார்ட்போனில் YONO SBI App பதிவிறக்கவும் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பின்னர் Pre-approved Loan என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்கு அடுத்தாற் போல், உங்களுக்கு எவ்வளவு கடன் தேவை, அதனை எவ்வளவு காலத்தில் கட்டப்போகிறீர்கள் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

பணம் வந்துவிடும்

மேற்கண்ட செய்முறைக்கு பின்னர் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ-யிலிருந்து OTP எண் வரும். அதனை பதிவு செய்த பின்னர் உங்களது கடன் தொகையானது உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த செயல்முறையானது வெறும் 45 நிமிடங்களில் முடிந்து விடும். ஆக 45 நிமிடத்தில் நீங்கள் நினைத்தபடி பதிவு செய்த கடன் தொகையினை பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக