விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது.மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி துப்பாக்கி படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுவதற்கு பிரபல இசையமைப்பாளரான எஸ். தமன் அவர்கள் கையெழுத்து போட்டதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் எஸ். எஸ். தமன் ஒரு தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தளபதி 65ல் இசையமைக்க ஆர்வமாக உள்ளது என்றும், கடந்த மூன்று வருடங்களாக விஜய்யுடன் பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இப்போது தான் வாய்ப்பு கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஷங்கரின் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தமன் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக