தந்தை மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததால் அவரது மகள் தீக்குளித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், 40 நாள்களாக மதுபானக் கடைகள் மூடப்படத்தை தொடர்ந்து மத்திய அரசு மதுக்கடை திறக்க அனுமதி கொடுத்தது. இதையடுத்து டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது.
தமிழக்தில் 43 நாள்கள் கழித்து இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தந்தை மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததால் 18 வயதான அவரது மகள் தீக்குளித்து உள்ளார். மகள் தீக்குளித்ததால் காப்பற்ற போன தாயும் படுகாயம் அடைந்தார். தற்போது ஆபத்தான நிலையில் தாய், மகள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக