தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட்
படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். துப்பறிவாளன், சைக்கோ
ஆகிய படங்கள் ஹிட் ஆன நிலையில் அடுத்து அவர் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கி
வந்தார்.
லண்டனில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து மிஷ்கின் திடீரென வெளியேறினார். அதனை தொடர்ந்து விஷால் அந்த படத்தினை தானே இயக்குவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்து மிஷ்கின் நடிகர் அருண் விஜய் உடனே கூட்டணி சேர்கிறார் என செய்தி சமீபத்தில் வெளியானது. கொரோனா லாக் டவுனில் சில கட்டுப்பாடுகள் உள்ளதால், மிஷ்கின் அருண் விஜய்க்கு போன் மற்றும் ஸ்கைப் வீடியோ கால் மூலமாக தான் கதையை கூறி ஓகே வாங்கியுள்ளார்.
தற்போது இந்த படம் பற்றிய மேலும் ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. இந்த படம் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.
சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு இரண்டாவதாக மிஷ்கின் இயக்கிய படம் தான் அஞ்சாதே. அதில் நரேன், பிரசன்னா, அஜ்மல், விஜயலக்ஷ்மி என பலர் நடித்து இருந்தனர். படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து இருந்தது அது.
அஞ்சாதே 2 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அனைத்தும் உறுதியான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதில் இடம்பெறுவார்களா என்பது பற்றிய தக்வல் எதுவும் தற்போது வெளிவரவில்லை.
இந்த படம் அருண் விஜய்யின் 32வது படம். இதனை அருண் விஜய்யின் 31வது படத்தை தயாரித்து வரும் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
ஒவ்வொரு படத்திலும் தனது உடல் தோற்றத்தை மெருகேற்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வரும் நடிகர் அருண் விஜய், அஞ்சதே 2ல் எப்படி நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது.
இது மட்டுமின்றி அருண் விஜய் தனது கைவசம் பாக்சர், அக்னி சிறகுகள் போன்ற படங்களை வைத்திருக்கிறார்.

அக்னி சிறகுகள் மல்டி ஸ்டாரர் படம்,
அதில் அருண் விஜய் உடன் விஜய் ஆண்டனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். கமல்ஹாசனின்
இளைய மகள் அக்ஷரா ஹாசன் விவேகம் படத்திற்கு பிறகு இதில் நடித்து வருகிறார். மூடர்
கூடம் நவீன் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான் உடன்பட பல
நாடுகளை நடைபெற்றது. லாக்டவுன் முடிந்தபிறகு மீண்டும் படக்குழு வெளிநாடுகளில்
ஷூட்டிங் நடக்கும் என தெரிகிறது.
அருண் விஜய் நடிக்கும் மற்றொரு படமான பாக்சர் படத்திற்காக அருண் விஜய் வியட்நாம் சென்று mixed martial arts எனப்படும் MMA சண்டையை பயின்று வந்தார். 7ம் அறிவு பட வில்லன் ஜானி தான் அவருக்கு சண்டை பயிற்சி கொடுத்தார்.
அது மட்டுமின்றி அருண் விஜய்யின் 31வது படத்தினை குற்றம் 23 புகழ் அறிவழகன் தான் இயக்கி வருகிறார். மேலும் ஹரிதாஸ் பட இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேல் உடன் அருண் விஜய் ஒரு படத்தில் இணையவுள்ளார் என செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக