Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

என்ன நடந்தாலும் யாருக்கும் வேலை போகாது: மாருதி சுஸுகி!

maruti suzuki

கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் ஊழியர்களின் வேலைவாய்ப்பையும் சம்பளத்தையும் குறைக்க மாட்டோம் என்று மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

 இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு வகையிலான கார்களைத் தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்துவருவதோடு, மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனம் தற்போது கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்துத் துறைகளிலும் பாதிப்புகள் இருக்கும் நிலையில், ஏற்கெனவே கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறையில் இழப்புகள் இன்னும் அதிகரித்துள்ளன. மிகப் பெரிய நிறுவனமான மாருதி சுஸுகியும் பெருத்த அடி வாங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 50,000 பேர் வரையில் மாருதி சுஸுகி நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், கொரோனா பீதியால் மார்ச் 22ஆம் தேதியில் கார் உற்பத்தி ஆலைகள் இழுத்து மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்டு நிலையில், 50 நாட்கள் கழித்து மே 12ஆம் தேதி உற்பத்தி மனேசரில் உள்ள உற்பத்தி ஆலையை மீண்டும் திறந்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம் வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. எனினும், ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்துப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் நிகர லாபம் 25 சதவீதமும், மொத்த வருவாய் 15 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு ஏப்ரல் - ஜூன் காலாண்டிலும் இழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இவ்வாறாக, கொரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், அதன் சுமையைத் தனது ஊழியர்கள் மீது செலுத்தப்போவதில்லை என்று மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதிரியான நெருக்கடியான நேரத்திலும் கூட ஊழியர்களுக்கான சம்பளத்தை முறையாகக் கொடுத்து வருவதாகவும், இதுவரை ஊழியர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை எனவும் கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல், நிதி ரீதியாக மிகவும் பின்னடைவை சந்தித்துள்ள சப்ளையர்ஸ் மற்றும் டீலர்களுக்கும் உதவத் தயாராக உள்ளதாகவும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.

அதோடு, ஊழியர்களின் அச்சத்தைப் போக்கும் செய்தியாக, யாரையும் பணிநீக்கம் செய்யமாட்டோம் எனவும், சம்பளத்தைக் குறைக்க்க மாட்டோம் எனவும் ஆர்.சி.பார்கவா உறுதியளித்துள்ளார். இயல்பு நிலை திரும்ப சில காலம் எடுக்கும் எனவும், அரசு தரப்பிலிருந்து வரிக் குறைப்பு உள்ளிட்ட ஆதரவு தேவை எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக