அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ஜோதிகாவை தவிர, இயக்குனர் பாரதி ராஜா, பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள் ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை தயாரித்த சூர்யாவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “பெண்குயின்” திரைப்படமும் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக இருந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்க பதிவில் உறுதிப்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இதேபோன்று அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் உள்ளிட்டோர் நடித்த “நிசப்தம்“ படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகுந்த பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனைகள் முடிந்து தியேட்டர்களை திறக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் ஓடிடியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதை அறிந்து கொண்ட அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து “நிசப்தம்“ படத்தை வாங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக