Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 மே, 2020

இனிமேல் இது இலவசமாக கிடைக்காது; ரீசார்ஜ் செஞ்சிக்கோங்க; ஏர்டெல் & வோடபோன் அதிரடி!


பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களின் கீழ் வரும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான லாக்டவுன் விதிகளிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் சிறிய கடைகள் "மெல்ல மெல்ல" மீண்டும் திறக்கப்படுகின்றன.


செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (சிஓஏஐ) மேனேஜர் ஜெனரல் ஆன ராஜன் மேத்யூஸ் கூறுகையில், பொது சேவை மையங்கள் திறக்கப்பட்ட பின்னர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இது வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களை குறிக்கிறது.

மக்கள் ரீசார்ஜ் செய்ய உதவ பல இடங்கள் இப்போது செயலில் உள்ளன!

பொது சேவை மையங்களை செயல்படுத்துவதோடு கூடுதலாக, சிறிய கிரானா கடைகள், ஏடிஎம்கள் மற்றும் பிற விற்பனையாளர்களும் உள்ளனர், அவைகள் மக்கள் ரீசார்ஜ் செய்ய உதவுகின்றன. மக்கள் தங்கள் சிம் கார்டுகளை ரீசார்ஜ் செய்வதற்கு இது போதுமானது என்று தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் உணர்கிறார்கள். எனவே, கட்டண திட்டங்களின் செல்லுபடியை இனியும் "இலவசமாக" நீட்டிக்க வேண்டாம் என்று டெலிகாம் முடிவு செய்துள்ளன.

வோடபோன் ஐடியா சமீபத்தில் உ.பி.-மேற்கில் வசிக்கும் மக்களுக்கு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டால், கிரானாக்கள் மற்றும் மருத்துவ கடைகள் போன்ற 6,500 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களின் உதவியுடன் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யச்சொல்லி அறிவுறுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் திட்டங்களின் செல்லுபடியை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப் போவதாக அறிவித்திருந்தன, பின்னர் அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டது.

வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.10 மதிப்பிலான கூடுதல் டால்க் டைமையும் இலவசமாக வழங்கின. அதே நேரத்தில், ரிலையன்ஸ் ஜியோ தனது சந்தாதாரர் தளத்திற்கு 100 நிமிட இலவச பேச்சு நேரத்தை வழங்கியது.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் வண்ணம் அனைத்து ரீசார்ஜ் விற்பனை நிலையங்களையும் இருப்பிடங்களையும் செயலில் வைத்திருக்க டெலிகாம் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன, இதனால் வரும் நாட்களில் மக்கள் தங்கள் சிம் கார்டுகளை ரீசார்ஜ் செய்வதில் எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக