சருமத்துக்கு பால் இயற்கையான மாய்சுரைசராக செயல்படுகிறது. உள்ளங்கை தோல் உரிதல் இருக்கும் போது அடிக்கடி கைகளை ஈரப்பதமாக்கி கொள்வதன் மூலம் தோல் உரிதலை தடுத்து நிறுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
பால் - 5 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
பாலை இலேசாக சூடு செய்து அகலமான குழியுள்ள தட்டில் ஊற்றி அதில் தேன் சேர்த்து கலக்குங்கள். சற்று வெதுவெதுப்பாக இருக்கும் போது கைகளை அந்த நீரில் முக்கிவிடுங்கள். சூடு ஆறும் வரை கைகளை அதில் மூழ்கவிடுங்கள். பாலில் இருக்கும் சத்து உங்கள் உள்ளங்கைகளை மிருதுவாக மாற்றும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்தாலே மாற்றம் நன்றாக இருக்கும்.
வறட்சியான உள்ளங்கைக்கு தேவை ஈரப்பதமும் சிறந்த மாய்சுரைசரும் தான். இவை தொடர்ந்து கிடைத்தாலே உள்ளங்கை தோல் உரிதல் முற்றிலும் குறையும் கூடும். நீங்கள் ஆயில் பயன்படுத்த நினைத்தால் செய்ய வேண்டியது இதுதான்.
வைட்டமின் இ ஆயில்- 4 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
வெதுவெதுப்பான நீரில் உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு கைகளை சுத்தமான மெல்லிய துண்டில் மென்மையாக துடைக்கவும். சற்று உலர்ந்ததும் வைட்டமின் இ ஆயில் கொண்டு இலேசாக மசாஜ் செய்யவும். உள்ளங்கை அழுத்தம் ஆரோக்கியத்துக்கும் நல்லது. வைட்டமின் இ ஆயிலுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயும் கூட பயன்படுத்தலாம். இந்த ஆயில் மசாஜ் உள்ளங்கையை நீண்ட நேரம் ஈரப்பதமாக வைத்து வறட்சி உண்டாவதை தடுக்கும்.
கற்றாழைசாறு போன்று வழவழப்பையும் மென்மையையும் இயற்கையாக தரும் பொருள் வேறு எதுவுமில்லை. கற்றாழை ஜெல் அல்லது கற்றாழையை அப்படியே பயன்படுத்தலாம். இவை கூடுதலாக உள்ளங்கையில் இருக்கும் அழுக்கையும் வெளியேற்றும் தன்மை கொண்டது. நீங்கள் கற்றாழையை தேர்வு செய்தால்
கற்றாழை ஜெல் - தேவைக்கு, கற்றாழை மடல் - சிறிதளவு ஏதேனும் ஒன்று.
கற்றாழை மடலாக இருந்தால் அதன் தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவிடவும். கற்றாழையில் இருக்கும் மஞ்சள் திரவம் வெளியேறிவிடும். பிறகு அதில் இருக்கும் நுங்கு பகுதியை எடுத்து கைகளில் மசாஜ் செய்யவும். இரவு படுக்கும் போது செய்துகொள்ளலாம். ஜெல்லாக இருந்தாலும் அப்படியே பயன்படுத்தலாம். மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடங்கள் உள்ளங்கை வைத்து எடுத்து உலரவிடலாம்.
வைட்டமின் சி, பி, கே, பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வறட்சியான உள்ளங்கைக்கு நீர்ச்சத்து தாரளமாக கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம். இதனால் அதிகப்படியான தோல் உரிதலில் தோல் சிவப்பு, தடித்தல் இருந்தாலும் எரிச்சல் உணர்ந்தாலும் அவை குறையும்.
வெள்ளரி துண்டுகள் - 6
வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி உடனே அதை உள்ளங்கையில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். உள்ளங்கை முழுவதும் விரல்கள் இடுக்கு வரை ஒரு உள்ளங்கைக்கு 5 நிமிடங்களாவது செலவிடுங்கள். இவை தோல் உரிதலை கட்டுப்படுத்தி அழகிய தோற்றத்தை கொடுக்க உதவும். தோலை கெட்டிப்படுத்தும்.
ஓட்ஸை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து 3 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு நன்றாக கலக்க வேண்டும். ஓட்ஸ் கலக்கிய பிறகு நீரின் கொழகொழப்பை உணர முடியும். இதை அகலமான பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையை அதில் மூழ்க விடவும். பிறகு கைகளை துடைத்து உலர்ந்தது மாய்சுரைசர் தடவி உள்ளங்கைகளை ஈரப்பதமாக்கவும். தோல் உரிதல் பிரச்சனை அதிகமாக இருந்தால் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம். தோல் உரிதல் படிப்படியாக குறையும்
வெந்நீர்
உள்ளங்கை தோல் உரிதலை எந்த பொருள்களும் இன்றி வெதுவெதுப்பான நீரை கொண்டே விரட்டவும் செய்யலாம். இவை எளிமையான பராமரிப்பும் கூட. அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி (தேவையெனில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ளலாம்) அதில் 10 நிமிடங்கள் உள்ளங்கைகளை வைத்து எடுங்கள். பிறகு கைகளை மிதமாக துடைத்து உலர்ந்ததும் மாய்சுரைசர் பயன்படுத்துங்கள்.
தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்துவந்தால் தோல் உரிதல் பிரச்சனை வேகமாக நீங்கும். அதே நேரம் நீங்கள் பராமரிப்போடு அதிக அளவு தண்ணீர் குடிக்கவும் மறந்துவிடாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக