
இருசக்கர
வாகத்தில் வேகமாகச் சென்றது குறித்து கேள்வி கேட்டதற்காக ஒரு சிறுவர்கள் சிலர்
கடைக்காரரை அரிவாள், கம்பியுடன் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்சியை
ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பகுதியில் சூர்யா நகரில் வசித்து வரும் சில சிறுவர்கள் நேற்று மாலை பைக்கில் வேகமாகச் சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் இருந்ததால் அருகே உள்ள மளிகைக்கடைக்காரர் ராஜேஷ் ஏன் இப்படி பைக்கில் வேகமாகச் செல்லுகிறீர்கள் கேட்டுள்ளார்.
இதனால், கோபம் அடைந்த சிறுவர்கள் ஒன்று கூடி ராஜேஷை திடிஅரிவாள் , கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகத் தெரிகிறது. இதனையெடுத்து ராஜேஷை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது..
சிறுவர்கள் இவ்வாறு ஆயுதங்களுடம் வந்து ராஜேசை தாக்கியதல் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த வந்த போலீஸார் 5 சிறுவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக