Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

வெட்டுக்கிளி வராது.. ஒருவேளை வந்தா இதை செய்யுங்க! – வேளாண்துறை வழிமுறை!

locust


வட மாநிலங்களில் வேளாண் நிலங்களை சூறையாடி வரும் வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள செய்யவேண்டிய வழிமுறைகளை தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்துள்ள வெட்டுக்கிளிகள் படை மத்திய பிரதேசதம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேளாண் வயல்களை துவம்சம் செய்து வருகிறது. இதுவரையிலும் தக்காண பீடபூமியை கூட தாண்டியிராத இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியா மாநிலங்களில் புகுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பெரும் இடர்பாடுகளை சந்தித்துள்ள விவசாயிகள் தற்போது வெட்டுக்கிளி படையெடுப்பால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வராது என்றாலும், வந்தால் அவற்றை ஒழிக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை தமிழக வேளாண் துறை விளக்கியுள்ளது. அதன்படி,

பயிர் பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.

மாலத்தியான் மருந்தை டிராக்டர்கள் மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலமாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் தெளிக்கலாம்.

வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழி போன்ற பறவைகளை அதிக அளவில் வளர்க்கலாம்
அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தை ஒட்டுமொத்தமாக வான்வெளியிலிருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக