Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 1 மே, 2020

ராமாயணம் முடிந்தவுடன் கடையை சாத்திய மக்கள்!

கொரோனா ஊரடங்கின்போது வீட்டில் அடைந்துகிடக்கும் மக்களின் பொழுதுபோக்கிற்காக பிரபல ‘ராமாயண்’ நாடகத்தை மறு ஒளிபரப்பு செய்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து ராாாயணம் நாடகம் ஒளிபரப்பப்பட்டதால் தூர்தர்ஷன் சேனல் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இந்நாடகத்தின் கடைசி எபிசோட் முடிந்துவிட்ட நிலையில் தூர்தர்ஷன் பார்வையாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.


பொதுவாக, ராமாயண் நாடகம் முடிந்தபிறகு செய்திகள், சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள், இசை ஒளிபரப்பாகும் சேனல்களை மக்கள் விரும்பி பார்ப்பதாக தெரியவந்துள்ளது. பிரதான நேரத்தில் பொது பொழுதுபோக்கு சேனல்களையும், திரைப்படங்களையுமே மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். பொழுதுபோக்கு சேனல்களை பார்ப்பவர்களிலும், புராணக் கதைகளை தழுவிய நாடகங்களையே அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

முன்பைவிட செய்திகள், திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தாக, செய்திகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 164 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது. திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 67 விழுக்காட்டை எட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக