ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மூலமாக இனி வரும் வாகனங்களில் ப்ளூடூத், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளாஸ்டர் போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலான இளைஞர்களின் பேவரைட் வாகன மாடலாக எப்போதும் திகழ்கிறது ராயல் என்ஃபீல்டு. காலத்திற்கு ஏற்றார் போல பல புதிய வாகனங்கள் மோட்டார் வாகன சந்தையில் களமிறங்கினாலும், ராயல் என்ஃபீல்டு வாகனத்திற்கு என கிளாசிக் ரசிகர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர்.
இதனால், ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்குகளுக்கு போட்டியாக வேறு நிறுவனங்களும் புது புது மாடல்களை களமிறக்கி வருகின்றன. மேலும், அவ்வாறு களமிறங்கும் பைக் மடல்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அதற்கேற்றாற் போல விலையையும் நிர்ணயித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
இதனால், ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் புதிய தொழில்நுட்பங்களை தனது தயாரிப்பு வாகனங்களில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இனி வரும் வாகனங்களில் ப்ளூடூத், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளாஸ்டர் போன்ற தொழில்நுட்பங்களை புகுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது தண்டர்பேர்டு 350 வாகனங்களுக்கு பதிலாக புதியதாக காளமிறக்கப்பட்ட மீட்டியோர் 350 இல் இந்த புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தபட உள்ளதாம். மேலும், புதிய மாடல்களுக்கு எல்.சி.டி திரையுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் வைத்துள்ளதாம். விரைவில், இந்த புதிய தொழில்நுட்பம் அடங்கிய புதிய மாடல் பைக்குகளும், தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் விலையும் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக