டாஸ்மாக் கல்லா கட்டும் என எதிர்ப்பார்த்த அரசுக்கு ஏமாற்றம் மட்டுமே
மிஞ்சியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல்
ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கு இடையே
டாஸ்மாக் திறந்த போது அரசு முன் வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது.
இதுகுறித்த மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதை
தொடர்ந்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுக்கடைகள்
திறக்கப்பட்டதோடு கூடுதல் நேரம், கூடுதல் டோக்கன் மதுப்பிரியர்களுக்காக
வழங்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கல்லா கட்டும் என எதிர்ப்பார்த்த அரசுக்கு
ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
ஆம்,
தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நீட்டிக்கப்பட்ட நிலையில்
டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் மேலும் குறைந்துள்ளது. முதலில் ரூ.163
கோடியிலிருந்து ரூ.133 கோடியாக குறைந்த டாஸ்மாக் வருவாய், 3 ஆம் நாளான நேற்று
மேலும் குறைந்து ரூ.109 கோடியானது.
இப்படியே
நாளுக்கு நாள் டாஸ்மாக் வருமான குறைவது அரசு அதிர்ச்சியை ஏற்படுத்த கூடும். ஏன்
என்றால் தமிழக அரசு மது விற்பனையை அரசின் முக்கிய வருமானமாக பார்க்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
3 ஆவது நாளான
திங்கள்கிழமை விற்பனை நிலவரம்:
மதுரை மண்டலம்
- ரூ. 28.6 கோடி
திருச்சி
மண்டலம் - ரூ. 27.4 கோடி
சேலம் மண்டலம்
- ரூ. 24.3 கோடி
கோவை மண்டலம் -
ரூ. 22.5 கோடி
சென்னை மண்டலம்
- ரூ. 6.5 கோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக