Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 மே, 2020

ஒருவழியாக ஜியோ "இதையும்" சேர்த்து விட்டது; பயனர்கள் ஹேப்பி!

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சேவை, நாடு முழுவதுமுல்லா அதன் செட்-டாப் பாக்ஸ்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ ஆதரவை வழங்கி வருகிறது. அதாவது இப்போது JioFber- இயக்கப்பட்ட டிவிகளில் OTT ஆப்ஸ்களின் பட்டியலில் இந்த ஸ்ட்ரீமிங் தளம் அணுக கிடைக்கிறது.


இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்களில் கிடைக்கும் பிற ஆப்களின் பட்டியலில் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் இயங்குதளமும் இணைகிறது.

ஏற்கனவே இந்த பட்டியலில் சன்என்எக்ஸ்டி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனிலிவ், வூட், ஜியோ சினிமா, ஏஎல்டி பாலாஜி மற்றும் பல உள்ளன. இருப்பினும், ஜியோ ஃபைபர் அதன் மேடையில் நெட்பிலிக்ஸ் ஆதரவை இன்னும் சேர்க்கவில்லை.

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக, எந்தவொரு சேவைக் கட்டணமும் இன்றி 10Mbps என்கிற அடிப்படை வேகத்தின் கீழ் இலவச Jio fiber பிராட்பேண்ட் இணைப்பை ஜியோ நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருகிராயூ என்பதும், புவியியல் ரீதியாக சாத்தியமான இடங்களில் இந்த இலவச பிராட்பேண்ட் சேவை கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜியோ நிறுவனம் அதன் ஹோம் கேட்வே ரவுட்டர்களை குறைந்தபட்ச திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையுடன் வழங்கும். உடன் தற்போதுள்ள அனைத்து JioFiber சந்தாதாரர்களுக்கும், அனைத்து திட்டங்களிலும் டபுள் டேட்டா நன்மையையும் வழங்குகிறது.

இதற்கிடையில், ஜியோ மீட் எனப்படும் தனது சொந்த வீடியோ கான்பரன்சிங் மென்பொருளை உருவாக்க ஜியோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கான புதிய ‘வொர்க் ப்ரம் ஹோம்' ப்ரீபெய்ட் திட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, மேலும் இது 51 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பேக் ரூ.251 என்கிற விலைக் குறியுடன் வருகிறது. சுவாரஸ்யமாக, இந்த பேக் எந்த அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் சலுகைகளையும் வழங்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக