Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 மே, 2020

காஞ்சி அருகே லாரியில் தப்ப முயன்ற வட மாநிலத்தவர்கள் கொத்தாக சிக்கினர்..!

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் 43 நாட்கள் கடந்தது. தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலதிற்கு அனுப்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.


இந்நிலையில் தாம்பரத்தில் பணி செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடைபயணமாக காஞ்சிபுரம் நோக்கி வந்த போது அவ்வழியாக வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லாரியை நிறுத்தி அந்த லாரியின் மூலமா அரக்கோணம் வழியாக செல்வதற்கு வந்துள்ளனர்.

அரக்கோணம் நகர காவல் துறையினர் லாரியை சோதனை செய்தபோது அந்த லாரியில் ஒரு பெண் ஒரு குழந்தை உட்பட 50க்கும் மேற்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர்கள் இருப்பது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் லாரிக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மிண்டும் காஞ்சிபுரத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அங்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு மாநில அரசின் வழிகாட்டுதல்படி அனைத்து தொழிலாளர்களை ரயில்கள் மூலம் அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக