Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

ரைஸ் மில் கழிவுகளால் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் இயங்கி வரும் ரைஸ் மில்லின் சாம்பல் கழிவுகள் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதால், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

இக்கழிவுகளை முறையாக அகற்றாமல் அருகிலுள்ள இளந்திரைகொண்டான் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டி வருகின்றனர். இதனால் காற்று வீசும்போது அருகிலுள்ள கிராமங்களுக்கு கழிவுகள் பரவுவதும், இவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தீக்காயமடைவதும், கண்களில் தூசு பட்டு குருடும் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அவ்வழியாக விறகு எடுக்கச் சென்ற அம்மையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த காமக்காள் (வயது 47) என்ற பெண் நிலை தடுமாறி சாம்பல் மீது தவறி விழுந்ததில் கால்கள் இரண்டும் வெந்து தீக்காயம் ஏற்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டவிரோதமாக சாம்பல் கொட்டிய ரைஸ் மில் மீது மாசு கட்டுபாட்டு வாரியமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக