Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

வெறும் ரூ.9,390 க்கு இப்படியொரு ஸ்மார்ட்போனா?

5000mAh பேட்டரி, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மற்றும் 6.6 இன்ச் டிஸ்ப்ளே போன்ற கவனத்தை ஈர்க்கும் அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 5 எனும் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ ஸ்பார்க் 5 ஆனது 6.6 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை (90.2% என்கிற ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்) கொண்டுள்ளது. மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தெளிவுத்திறனுக்கான ஆதரவை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் நவீன பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே டிசைனுடன் வருகிறது. டிஸ்பிளேவில் இடம்பெற்றுள்ள கட்அவுட்டில் செல்பீ கேமரா உள்ளது.

முன்னரே குறிப்பிடப்படி இது Android 10 ஓஎஸ் அடிப்படையிலான HiOS 6.1 கொண்டு இயங்குகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 5-ஐ இயக்கும் ஆக்டா கோர் சிப்செட்டின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு மெமரி வேரியண்டில் மட்டுமே வெளியாகியுள்ளது.அது2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும் கைரேகை ரீடர் உள்ளது. மேலும் இது உங்கள் முகத்தைப் பயன்படுத்தியும் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் ஆதரவினை கொண்டுள்ளது, அதாவது பேஸ் அன்லாக் அம்சம்.

கேமராக்களைப் பொருத்தவரை, இது 13 மெகாபிக்சல் (எப்/ 1.8) + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + அறியப்படாத நான்காவது கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் க்வாட் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது, இது இரட்டை எல்இடி ஃபிளாஷை கொண்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஒரு மிகப்பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அனுப்பப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, இது VoLTE உடனான 4G மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மிஸ்டி கிரே, வெக்கேஷன் ப்ளூ, ஐஸ் ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு உள்ளிட்ட நான்கு வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் விலை:

தற்போது வரையிலாக இந்தியாவில் விற்பனைக்கு வராத இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் சுமார் ரூ.9,390 ஆகும். டெக்னோ ஸ்பார்க் 5 மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்வது குறித்து நிறுவனத்திடமிருந்து எந்த விதமான அதிகாரபூர்வமான வார்த்தையும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக