கேரளாவில் இன்று 2வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேரளாவில் இன்று 2வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இங்கு தற்போது 34 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதனிடையே கேரளாவில் இதுவரை மொத்தம் 499 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 61 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் அங்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 462 ஆக உள்ளது. தற்போது கொரோனா வார்டில் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கேரளாவில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது கொரோனா பரவல் குறைத்திருக்கிறது. இதனால் கேரளாவில் சில பகுதிகளுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகி அங்கு இயல்பு நிலையும் திரும்பிள்ளது. இதனிடையே நாடு முழுவதும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,836 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 1,389 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக