பிரபல இயக்குநர் ராமாநந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் நாடகம் 80களில் மிகப்புகழ் பெற்றதாகும். கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தபின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் இந்நாடகத்தை மறு ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில், இந்த நாடகம் உலகளவில் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளதாக தூர்தர்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சாதனை புரிவது ராமயணா நாடகத்திற்கு புதிதல்ல. 1987ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை உலகிலேயே அதிக பார்வையாளர்கள் கண்ட நாடகம் என்ற சாதனையை ராமாயணா படைத்திருந்தது. கொரோனா ஊரடங்கு தொடங்கிய பின்னர் 80களின் பிரபல நாடகங்களை மறுஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷன் நிறுவனம் முடிவெடுத்தது. மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நான்கு நாட்களில் 17.4 கோடி பார்வையாளர்களை ராமாயணா ஈர்த்தது.
மார்ச் 28க்கும் ஏப்ரல் 4க்கும் இடைப்பட்ட காலத்தில் 50 கோடி பார்வையாளர்களை ராமாயணா ஈர்த்துள்ளது. ராமாயணா மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ்களின் விருப்ப நாடகமான
மார்ச் 28க்கும் ஏப்ரல் 4க்கும் இடைப்பட்ட காலத்தில் 50 கோடி பார்வையாளர்களை ராமாயணா ஈர்த்துள்ளது. ராமாயணா மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ்களின் விருப்ப நாடகமான
சக்திமான் மாகாபாரத், ப்யோம்கேஷ் பக்ஷி போன்ற நாடகங்களையும் தூர்தர்ஷன் மறுஒளிபரப்பு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், எதிர்பார்த்ததைப் போலவே அதிக பார்வையாளர்களையும் ஈர்த்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக