கொத்து
கொத்தாக வரும் வெட்டுக்கிளிகளை அழிக்க ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரோன் மூலம்
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மின்னல் வேகத்தில்
தாக்கி பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி
கூட்டமாக படையெடுத்து மின்னல் வேகத்தில் தாக்கி பயிர்களை அழித்துவிடும். பல்வேறு
நாடுகள் இந்த பூச்சியினத்தால் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களாக
இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் பயிர்களை
தின்று சேதம் விளைவித்த வெட்டுக்கிளிகள் மகாராஷ்டிரா மாநிலத்துக்குள்ளும் புகுந்து
விட்டன.
காய்கறி
பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள்
நாக்பூர் மாவட்டத்தின் கட்டோலி
தாலுகாவில் உள்ள பெட்ரி, கன்காவ் மற்றும் வார்தா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை
ஆரஞ்ச் பயிர் மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்தின. அதன்பின் பண்டாரா
மாவட்டத்துக்குள் நேற்றுமுன்தினம் அவை புகுந்து விட்டன.
கொத்து,
கொத்தாக வரும் வெட்டுக்கிளிகள்
அதேபோல் தேமனி கிராமத்தில் ஒரு கி.மீ.
சுற்றளவில் உள்ள மரங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கொத்து, கொத்தாக
அமர்ந்து இருந்தன. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் பூச்சி கொல்லி
மருந்து அடிக்கப்பட்டன. இதில் பல வெட்டுக்கிளிகள் செத்து கீழே விழுந்தன.
ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து
அதேபோல் ராஜஸ்தான் மாநிலம்,
ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. இதையடுத்து
அங்குள்ள விவசாய பயிர்கள் பெரிதும் சேதமடைந்து வருகின்றன. இந்த நிலையில்,
ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு, சமோத் ஆகிய பகுதிகளில், ட்ரோன் உதவியுடன்
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
15 நிமிடத்தில் 2.5 ஏக்கர் அளவில்
இதுகுறித்து வேளாம்துறை ஆணையர் ஓம்
பிரகாஷ் கூறுகையில், வாடகை ட்ரோன்களை பயன்படுத்தி வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு
வருகிறது எனவும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு வாகனங்கள் செல்லமுடியாமல் இருக்கும் கரடுமுரடான பகுதிகளிலும் ட்ரோன் மூலம்
மருந்து தெளிக்கப்படும் எனவும் சுமார் 15 நிமிடத்தில் 2.5 ஏக்கர் அளவில்
பூச்சிக்கொல்லி தெளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக