Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 மே, 2020

ரூ.8,999-க்கு இவ்ளோ அம்சங்களா.! வெளியானது மோட்டோவின் அடுத்த படைப்பு.!

மோட்டோ G8 Power Lite ஸ்மார்ட்போன் Flipkart இணையதளத்தில் இன்று மதியம் 12மணிக்கு விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999.
மோட்டோரோலா நிறுவனம் அன்மையில் தான் இந்தியச் மார்க்கெட்டில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை லான்ச் செய்தது. மேலும் இந்தியாவில் குறைந்த விலையில் அழகான சிறப்பம்சத்துடன் மோட்டோ ஜி8 பவர் லைட் என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது Flipkart இணையதளத்தில் இன்று மதியம் 12மணிக்கு விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 ஆகும். உங்களது வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும்.
மோட்டோ ஜி 8 பவர் லைட் (6.5) Max Vision HD+ டிஸ்பிளே. இந்த டிஸ்பிளேயின் காட்சி விகிதம் 20: 9 என்ற அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.3 GHz octa-core மீடியாடெக் P35 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இந்த புதிய மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்,4 GB RAM, 64 GB இன்டர்னல் ஸ்டோரேஜ், மெமரி கார்ட் 256 GB வரை விரிவாக்க வழங்கப்படுகிறது.மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமராவை கொண்டுள்ளது. பின் கேமராவில் ஒரு 16 mp கேமராவும், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பக்க கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராகவும் கொண்டுள்ளது. மேலும் இதில் 5,000 எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் ப்ளோட்வேர் கூடுதலாக, மோட்டோ ஜி 8 லைட் வாட்டர் ரெப்பலேண்ட் மற்றும் பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக