>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 25 மே, 2020

    அல்சரை ஆரம்பத்தில் கண்டறிந்தால் இந்த உணவுகளை கொண்டே குணப்படுத்திவிடலாம்!

    மணத்தக்காளி கீரை சற்று இனிப்பும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டிருக்கும். இதில் இருக்கும் சிறு மிளகு அளவில் இருக்கும் தக்காளியை பறித்து காய்வைத்து மணத்தக்காளி சுண்டலாக்கி சாப்பிடுவதுண்டு.

    வைட்டமின் டி மற்றும் இ சத்துகளை கொண்டிருக்கும் மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி பாசிப்பருப்புடன் வேகவைத்து தேங்காயெண்ணெயில் தாளித்து உடன் தேங்காய்த்துருவலை சேர்த்து கொதிக்க வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். ஒரு கப் சாதத்துக்கு இரண்டு கப் கீரையை சேர்த்து கொள்ளவும். மணத்தக்காளி சூப் காட்டிலும் இம்முறையில் அதிக அளவு கீரையை உட்கொள்ளமுடியும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டாலே பலன் தெரியும்.

    அகத்திக்கீரை

    வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுப்புண்ணுக்கும் அருமருந்து என்று சொல்லகூடியது அகத்திக்கீரை. கசப்பு மிகுந்த அகத்திக்கீரையில் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புகள், மாவுசத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகள் உண்டு.

    அகத்திக்கீரையை துவரம்பருப்புடன் கலந்து வேக வைத்து தேங்காய்த்துருவல் சேர்த்து கூட்டாக்கி நல்லெண்ணெய் சேர்த்து தாளிக்கவும். இவை உணவுக்குழாய் முதல் குடல் புண் வரையும், மலக்குடலையும் சுத்தம் செய்து புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது. ஆனால் அகத்திக்கீரையை மணத்தக்காளி கீரை போன்று தொடர்ந்து எடுத்துகொள்ள முடியாது. அவை உடலில் வேறுமாதிரியான குறைபாட்டை உண்டாக்கிவிடும். எனினும் அல்சர் இருப்பவர்கள் 15 நாளுக்கு ஒருமுறை ஒரு கப் அளவு எடுத்துகொள்ளலாம். இதனால் பலனும் கிடைக்கும்.

    தினம் ஒரு வேளை உணவு கீரை என்பது போல் ஒருவேளையாவது தேங்காய்ப்பால் குடிப்பதன் மூலம் வயிற்றுக்கு இதமாக இருக்கும்.

    குறிப்பாக காலை வேளையில் தேங்காய்ப்பால் சேர்த்த உணவு எடுத்துகொள்ள வேண்டும். ஆவியில் வேக வைக்கப்பட்ட இடியாப்பம், இட்லி உடன் ஒரு டம்ளர் தேங்காய்ப்பால் தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். மாலை வேளையிலும் இரவு நேரத்திலும் இவை செரிமானத்தை தாமதமாக்கும் என்பதால் இதை காலையில் எடுத்துகொள்ள வேண்டும். தினமும் கொப்பரைத்தேங்காய் உள்ளங்கையில் பாதி அளவு எடுத்து மென்று உமிழ்நீரோடு மென்று விழுங்க வேண்டும்.

    நன்றாக கனிந்த வாழைப்பழம் மலைவாழைப்பழம், ஏலக்கி, செவ்வாழை,பச்சை வாழைப்பழம் நன்றாக கனிய வைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். மாதுளம்பழத்தை சாறு பிழிந்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.ஆப்பிள் சாறும் குடிக்கலாம். ஃப்ரெஷ்ஷாக இருக்கும் திராட்சை பழங்களை சாறாக்கி இனிப்பு சேர்க்காமல் தேவையெனில் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.

    கொத்துமல்லி,புதினா சேர்த்து சாறாக்கி சிட்டிகை உப்பு, சிட்டிகை மிளகு சேர்த்து குடித்து வரலாம். வெள்ளரிக்காய் சாறு, நுங்கு, இளநீர் போன்றவை அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு கோடைக்காலத்தில் அருமருந்தாக இருக்கும். தினம் ஒன்று என்று திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். பழங்கள் சாப்பிட விருப்பம் இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் இதை தினம் ஒன்றாக எடுத்துவந்தால் அல்சர் பிரச்சனை வேகமாக தீரும்.

    தினம் ஒரு கப் தயிர் அல்சர் இருப்பவர்களுக்கு தீர்வு கொடுக்கும். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. 100 மில்லி அளவு ஒரு கப் தயிர் எடுத்துகொள்ள வேண்டும். பசுந்தயிர் சிறந்த பலன் தெரியும்.

    தயிரை காட்டிலும் சிறப்பானது மோர். எவ்வளவுக்கெவ்வளவு மோரை எடுத்துகொள்கிறோமோ அவ்வளவு விரைவில் புண்களை ஆற்றக்கூடியது மோர். மோரில் இருக்கும் புரதமானது வயிற்றில் இருக்கும் காரத்தின் ஆற்றலை குறைத்துவிடும். வயிறு எரிச்சலை குறைக்கும். நெஞ்செரிச்சல் நீங்கும். வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்ற உதவும். அல்சர் தீவிரமாக இருக்கும் போது வாய்ப்புண் சேர்ந்திருக்கும். அப்போது மோரில் சிட்டிகை சீரகத்தை பொடித்து கலந்து குடித்து சில நிமிடங்கள் வாயில் வைத்திருந்து விழுங்கினால் பலன் கிடைக்கும். தினமும் இரண்டு டம்ளர் அளவு எடுத்துகொள்ளலாம்.

    அல்சர் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உணவு வழியாகவே கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக