>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 28 மே, 2020

    அடடா என்ன ஒரு ஆச்சர்யம்! உங்க வீட்ல பிரியாணி இலை இருக்குதா? அப்ப இப்படி செய்து பாருங்க!


    பிரியாணி இலையை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள். இன்று நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில், பிரியாணி இலை ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த உதவுகிறது. இதை பார்ப்பதற்கு வெறும் இலை போல தெரிந்தாலும், இந்த இலையில் உள்ள ஆண்டி - ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக உள்ளது.
    இதுவரை இந்த இலையை நாம் உணவிற்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இந்த இலை நமது மனதையும், நாம் சுவாசிக்கும் காற்றையும் சுத்தமாக வைக்க உதவுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகும் என சிந்திக்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம்.
    நாம் சமையலுக்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும், ஒன்று அல்லது இரண்டு இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகையானது நமது வீட்டை சுற்றும்  காற்றை சுத்தமாக்குவதோடு, நமது மன நிலையையும் சீராக்க உதவுகிறது. 
    பிரியாணி இலையில் உள்ள யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரண்டு சேர்மங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எனவே பிரியாணி இலையை எரித்த பின் அதில் இருந்து வரும் வாசனையானது, மூளையின் நரம்புகளை ரிலாக்ஸ் அடைய செய்து, மன உளைச்சலை நீக்குகிறது. 
    இந்த இலையில் இருந்து வரும் புகையானது ஒவ்வாமை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் உள்ள வீக்கங்களை நீக்க உதவுகிறது. வீட்டில் துர்நாற்றம் வீசினால், இந்த இலையை எரிக்கும் போது அதில் இருந்து வெளி வரும் புகையானது துர்நாற்றத்தை நீக்குகிறது. 
    எரிக்கும் முறை 
    ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று பிரியாணி இலையை எடுத்துக் கொண்டு அறையினுள் சென்று, ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்துக் கொண்டு, பிரியாணி இலையை எரித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். 
    பின் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் அறைக்குள் சென்று, அந்த  புகையை சுவாசிக்க வேண்டும். இவ்வாறு 5-7 முறை செய்தால், நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், மன ஆரோக்கியமும் மேம்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக