இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னரான முருகதாஸ் தீர்த்தபதி அம்பாசமுத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.
உடல்நலம் தேறாத நிலையில், அவரது வீட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32 ஆவது பட்டத்துக்காரர் நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. வயோதிகம் காரணமாக சில காலமாக இவர் உடல்நலம் குன்றியிருந்தார்.
உடல்நலம் தேறாத நிலையில், அவரது வீட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.
ஜமீன்தார் முறை ஒழிப்புக்கு பின்னர், இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிக் கொண்ட மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.
அம்பாசமுத்திரம் வட்டத்துக்குட்ட பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையினர்தான் நிர்வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக