கொரோனா வைரஸ்
பாதிப்பிலிருந்தே இன்னும் மனித இனம் மீண்டு வராத நிலையில் தற்போது மேலும் ஒரு
வைரஸ் செர்பெரஸ்வைரஸ் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை தாக்கி வருவதாக எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது
இது குறித்து
சர்வதேச போலீசார் கூறிய போது செர்பெரஸ் என்ற ஸ்மார்ட்போன் வைரஸ் தற்போது மிக
வேகமாக பரவி வருவதாகவும் இது குறித்து ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளிகள்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் கடிதம்
அனுப்பியுள்ளது
ஹேக்கர்கள்
கண்டுபிடித்த இந்த செர்பெரஸ் வைரஸ் ஒரு குறுந்தகவலை ஸ்மார்ட் போனுக்கு அனுப்பும்
என்றும், அந்த குறுந்தகவலில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் உடனே அந்த செல்போனில்
உள்ள அனைத்து வங்கி கணக்குகளில் புகுந்து அதிலுள்ள தகவல்களை திருடி விடும்
என்றும், அதன் பின்னர் ஒவ்வொரு முறை வங்கிக் கணக்கை பயன்படுத்தும்போது முறைகேடாக
வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது ஏன்றும்
ஏற்கனவே இந்த வைரஸால் பலர் ஏமாந்து உள்ளதாகவும் சர்வதேச போலீஸ் எச்சரித்துள்ளது.
எனவே தேவையில்லாமல்
வரும் குறுந்தகவலில் வரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்
என்றும் அனைத்து நாடுகளின் அரசுகளுக்கு சர்வதேச போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரசை விட படு மோசமாக இந்த வைரஸ் பரவி வருவதாகவும் இது அனைத்து நாடுகளும்
விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் சர்வதேச போலீசார் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக