Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

காசு கொடுத்தும் பாக்கமாட்றாங்க.! இப்படிப்பட்ட பயனார்களை நீக்க போகும் நெட்ஃப்ளிக்ஸ்

ஆன்லைன் OTT நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது நெட்ஃப்ளிக்ஸ் செயலியை உபயோகப்படுத்தாமல் இருந்தால் பயனார்களின்  கணக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT  ப்ளாட்பார்ம்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் app  190 மேற்பட்ட நாடுகளில் 183 மில்லியன் சப்ஃகிரைபர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர்களில் சிலர் ஒரு வருடம் மற்றும் அதற்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸ் செயலில் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் செயலியை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து பணம் செலுத்துகிறார்கள்.

அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு ஒரு புதிய அறிவிப்பை ஒன்றை வெளிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் பணம் செலுத்தி சேர்ந்துவிட்டு ஒரு வருடத்திற்கு மேலாக, எதையும் பார்க்காமல் இருப்பவர்கள், தொடர்ந்து உறுப்பினர்களாக கணக்கு நீடிப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வாடிக்கையாளருக்கு மெயில் மற்றும் நோட்டிபிக்கேஷன் அனுப்பப்பட்டுள்ளது.இதனை உறுதி செய்யப்படாதவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2 வருடங்களுக்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கும் இதே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனி வரும் காலங்களில் இப்படித்தான் என்றும் இதற்கான வேலைகள் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புதியமுறையின் மூலம் மக்களின் பணம் மிச்சப்படுத்துப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என நெட்ஃபிக்ஸ் தயாரிப்பு இயக்குனர் எடி.வு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக