Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 மே, 2020

டிஸ்கவரி சேனலில் தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகர்.!

நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு சில காலங்களில் தமிழ் சினிமாவின் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தற்போது, துணை நடிகராகவும் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது இவர் அண்ணாத்த, அக்னி சிறகுகள், தலைவி உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி உள்ளார். 

சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்கி ஒளிப்ரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜூம் டிஸ்கவரி சேனலில் 'வைல்டு கர்நாடக' என்ற நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கில் தொகுத்து வழங்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக