காமெடி நிறைந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அதில் சந்தானத்தின் மூன்று கெட்டப்களும் உள்ளது.
சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு - 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. . மேலும் நாளை இந்த படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ரும், நாளை மறுநாள் மூன்றாவது போஸ்ட்ரும் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது காமெடி நிறைந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அதில் சந்தானத்தின் மூன்று கெட்டப்களும் உள்ளது. தற்போது இந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக