76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வந்த சாது பிரகலாத் ஜனி என்கிற 90 வயது சாமியார் உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தில் காந்திநகர் மாவட்டதிலுள்ள சரடா என்கிற கிராமத்தை சேர்ந்த சாது பிரகலாத் ஜனி என்கிற 90 வயது சாமியார் இன்று உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
இவர் கடந்த 76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இவரை மக்கள் மாதாஜி என அழைத்து வந்துள்ளனர்.
இவர் உணவின்றி வாழ்வதை அறிந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகளும் டாக்டர்களும் ஒரு சிறப்பு குழு மூலம் அவரை 2003 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சி செய்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், அந்த சாமியார் உணவின்றி வாழ்வதற்கு ஓர் சிறப்பு உடற்பயிற்சி செய்து வருகிறார் என குறிப்பிட்டனர்.
சாது பிரகலாத் ஜனி சாமியார் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால், சொந்த ஊருக்கு சென்ற அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது அடக்கம் இவர் வாழ்ந்து வந்த ஆசிரமத்தில் நடைபெறும் என சாமியாரின் சீடர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக