நமது
கணிணி அல்லது லேப்டாப்பில் மணிக்கணக்கில் தொடர்ந்து வேலை செய்யயும்போது பொதுவாக
நமக்கு வலை உலாவியில் (வெப் ப்ரவுசர்) ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யவேண்டியுள்ளது
(மல்டி டாஸ்க்கிங்)..
இந்த நடைமுறையில், வழக்கமாக ஒரே
நேரத்தில் பல ப்ரவுசர் டேப்களை திறந்துவைத்து பணியாற்றுவது தான் பொதுவாக நடைபெறும்.
தற்போது கூகுள் நிறுவனம் அதன் உலாவியான கூகிள் குரோம்-ல் இதுபோன்ற ப்ரவுசர் டேப்களை
சிறப்பாக நிர்வகிக்க விரும்புகிறது.
கூகிள்
குரோம்-ன் பீட்டா பதிப்பானது ‘டேப் குரூப்ஸ்' என்ற புதிய அம்சத்தைப் பெற்றுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம், கூகுள் குரோம் பயனர்கள் பல டேப்களை ஒரே குழுவாக இணைத்து
அவற்றை ஒரே டேப் ஆக ஒழுங்கமைக்க முடியும்.
இந்த
டேப் குரூப்களூக்கு தனிப்பட்ட பெயர் , ஈமோஜிகள் மற்றும் நிறங்களை வழங்கி அவற்றை
எளிதாக வேறுபடுத்தி பணிகளை சுலபமாக்க இந்த புதிய அம்சம் குரோம் பயனர்களை
அனுமதிக்கிறது. பல டேப் குழுக்களை உருவாக்கி அவற்றை ஒற்றை டேப் போல இயக்கலாம்.
எளிமையான கிளிக் மூலம் டேப்களை தேவையான இடத்திற்கு இழுத்து எளிதாக
மறுவரிசைப்படுத்தவும் முடியும்.
இந்த புதிய
அம்சத்தின் வசதிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. ஒதுக்கப்பட்ட குழுவிலிருந்து
இன்னொரு குழுவிற்கு ஒரு டேப்-ஐ மாற்ற பயனர்கள் முடிவு செய்தால், இப்போது குரோமில்
டேப்களை இடமாற்றம் செய்யப்படுவது போல, இந்த புதிய செயல்பாட்டினை கொண்டு ஒரு எளிய
கிளிக் மற்றும் ஸ்லைடு மூலம் அவ்வாறு செய்ய அனுமதிக்கும் . எந்தவொரு
குழுவிலிருந்தும் டேப்-ஐ கிளிக் செய்து பிடித்துக் கொண்டு அதை மற்றொரு குழுவில்
ஸ்லைடு செய்து இணைக்க செய்யலாம்.
டேப் குழுக்கள் குரோமில் பின் செய்யப்பட்ட டேப்கள் போல செயல்படும். இதன் பொருள், ஒரு குழுவில் உள்ள டேப்களை மூடிய பின் குரோம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் அவற்றின் வலைப்பக்கங்களைத் தக்க வைத்துக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக