புதிய
தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுகம் நிகழ்வுகள் குறித்து முக்கிய முடிவுகள்
எடுக்கப்பட்டன. இதுதொடர்பான விரிவான விபரங்களை பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக,
அண்மையில் நடைபெறவிருந்த புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக
நிகழ்வு நடப்பாண்டு டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகையே
அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவிலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மக்களிடையே இந்த வைரஸ் பரவல் தடுக்க மூன்று முறை ஊரடங்கு உத்தரவு அமல்
செய்யப்பட்டது. அதில் முதல் இரண்டு ஊரடங்கு நடைமுறையின் கடுமையான விதிகள்
பின்பற்றப்பட்டன.
அத்தியாவசப் பொருட்களை விற்பனையை தவிர, ஏனைய பொருட்களின் விற்பனை மற்றும் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் வாகனத்துறை, விற்பனை, சர்வீஸ், சந்தைப்படுத்துதல் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மார்ச் இறுதி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருந்த புதிய வாகனங்களின் அறிமுக நிகழ்வுகள் நடைபெறாமல் போனது. இதற்கிடையில் மே 4ம் தேதி முதல் வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு விதிகளில் இருந்து சில தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வாகன நிறுவனங்கள் தங்களுடைய டீலர்ஷிப்புகளை மீண்டும் திறந்துள்ளன. வைரஸ் பாதிப்பு குறைவாக காணப்படும் ஊரகப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளில் மீண்டும் வாகன உற்பத்தி துவங்கியுள்ளது.
இதற்கிடையில் அண்மையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருந்த ஹூண்டாய் புதிய தலைமுறை ஐ20 காரின் அறிமுக நிகழ்வு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஹூண்டாய் ஐ20 மாடலுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. அந்த வகையில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரினுடைய அறிமுக நிகழ்வு பெரிதும் எதிர்பார்க்கக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த காரினுடைய நிகழ்வு நடப்பாண்டு டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைப் போன்று இல்லாமல், இந்த காரினுடைய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
மேலும் புதிய ஐ20 காரில் செயல்திறன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி புதியதாக முன்பக்க ஃபேசியா, புதிய கேஸ்கேடிங் கிரில், ரீடிசைன் செய்யப்பட்ட முகப்பு விளக்குகள், பூட்-லிட்டை ஒட்டியது போன்ற லைட் பார், இழுத்துவிடப்பட்ட ஸ்பிளிட் பின்பக்க விளக்குகள் இடம்பெற்றுள்ளன.
பக்கவாட்டில் அடர்த்தியான ஷோல்டர் லைன், புதிய டூயல்-டோன் அலாய் சக்கரம், மேலும் சிறியதாக க்ரீஸ் லைன் என சிறப்பான ப்ரீமியம் தரத்திலான கட்டமைப்பை இந்த கார் பெற்றுள்ளது. மேலும் இந்த காரினுடைய உட்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி புதிய வடிவமைப்புடன் கூடிய டாஷ்போர்டு, 10.25 அங்குலத்திலான டிஸ்பிளேக்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், தொடுதிரை இன்ஃபொடெயின்மென் சிஸ்டம் போன்ற அம்சங்கள் புதிய ஐ20 காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்டுராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். அதேபோல இதில் ப்ளூலிங் கனெக்டெட் தொழில்நுட்பம் உள்ளது. ஹூண்டாய் வென்யூ மாடலில் வழங்கப்பட்டுள்ளது போல 33 கட்டளைகளை ஏற்கும் வசதி இந்த காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கார் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 டீசல் ஆகிய எஞ்சின் தேர்வுகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதே எஞ்சின்கள் கியார் செல்டோஸ் மாடலில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சிவிடி தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் சிவிடி தேர்விலும், 1.5 லிட்டர் டீசல் மாடல் டார்க் கன்வெர்டட் தேர்விலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டூயல்-கிளட்ச் டிசிடி தேர்விலும் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு வந்த பிறகு மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார்களுக்கு சரிநிகர் போட்டியாக அமையும். எனினும், காருக்கு நிர்ணயம் செய்யப்படவுள்ள விலை அதை தீர்மானிக்கும்.
இந்தியாவில் ஹூண்டாய் ஐ20 கார் பிரபலமான மாடலாக உள்ளது. தற்போது இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட்டுகள் மேலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடுதலாக வழங்கப்படும் செயல்திறன் தேர்வுகள் காரணமாக நிச்சயம் பெரிய வாடிக்கையாளர் வட்டத்தை புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக