Realme
Narzo 10A ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு
வந்துள்ளது. பிளிப்கார்ட் மற்றும் ரியில்மி.காம் வலைதளத்தில் இந்த ஸமார்ட்போனை
வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
ரியல்மி நர்சோ 10 ஏ
ஸ்மார்ட்போன்
ரியல்மி
நர்சோ 10 ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரியல்மி 10 உடன்
இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி
வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
முன்னதாகவே
ஆஃப்லைன் கடைகளில் விற்பனை
குஜராத், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான்,
மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் இந்த மாடல் ஸ்மார்ட்போன்
முன்னதாகவே ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி
வாடிக்கையாளளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை சலுகை
ரியல்மி நர்சோ 10A ஸ்மார்ட்போன்
விற்பனை சலுகைகளில் பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் வங்கி க்ரெடிட் கார்டு மூலம் ஐந்து
சதவீத கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு
இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம்
மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர்
மீடியாடெக் ஹிலியோ ஜி 70 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி நர்சோ 10 ஏ
ரியல்மி நர்சோ 10 ஏ 6.5 இன்ச் டிஸ்ப்ளே ஆகும், இது 20: 9 காட்சி விகிதத்தையும்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு
ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா
அமைப்பு உள்ளது. பிரதான கேமரா 12 மெகாபிக்சல் சென்சார், இரண்டாவது கேமரா 2
மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர், மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்.
இது 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
5,000 எம்ஏஎச் பேட்டரி
நர்சோ 10 ஏ ஸ்மார்ட்போனில் 5,000
எம்ஏஎச் பேட்டரி பேக் உள்ளது. ரியல்மி நர்சோ 10 ஏ, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி
சேமிப்பு வசதி கொண்ட போன் விலை ரூ.8,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக