>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 12 ஜூன், 2020

    ரூ.300 ஆர்டருக்கு ரூ.19,000 மதிப்பிலான ஹெட்போன் டெலிவரி! அமேசான் தந்த இன்ப அதிர்ச்சி.!


    பாடி லோஷனிற்கு பதிலாக வந்த பிரீமியம் ஹெட்போன்ஸ்
    அமேசான் ஷாப்பிங் தளத்தில் 300 ரூபாய் மதிப்பிலான பாடி லோஷன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரூ.19,000 மதிப்புடைய போஸ் ஹெட்ஃபோன்களை அமேசான் டெலிவரி செய்துள்ளது. இவர் ஆர்டர் செய்த பொருளுக்கு மதிப்பிலான அதிக மதிப்புடைய பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்று அமேசான் நிறுவனத்திடம் புகாரளித்துள்ளார். இதற்கு அமேசான் கூறிய பதில் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
    பாடி லோஷனிற்கு பதிலாக வந்த பிரீமியம் ஹெட்போன்ஸ்
    ஜோஷ் மென்பொருளின் இணை நிறுவனரும் இயக்குநருமான கெளதம் ரீஜ், இரண்டு தினங்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தை டேக் செய்து ஒரு பதிவைப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அமேசான் பார்சலில் ஒரு சர்ஃப் எக்ஸ்செல் லீக்குய்ட் பாக்கெட் உடன் போஸ் நிறுவனத்தின் அதிக விலை கொண்ட உயர் மாடல் ஹெட்போன்ஸ் இருக்கும் புகைப்படத்துடன் கெளதம் ரீஜ் பதிவு செய்துள்ளார்.
    தவறுதலான பார்சல்
    கெளதம் ரீஜ் தனது நேர்ந்த வினோதமான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அமேசான் மூலம் ரூ .300 மதிப்பிலான பாடி லோஷனை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அதற்குப் பதிலாகக் கிட்டத்தட்ட ரூ .19,000 மதிப்புள்ள போஸ் ஹெட்போனை பெற்றிருக்கிறார். இவருக்கு வந்த தவறான பொருளை நிறுவனத்திடம் ஒப்படைக்க அமேசான் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைத் தொடர்பு செய்துள்ளார்.
    அமேசான் கொடுத்த இன்ப அதிர்ச்சி
    கெளதம் ரீஜ், அமேசான் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் நடந்ததை எடுத்துரைத்திருக்கிறார். இவரின் புகாரைக் கேட்ட சேவை மைய அதிகாரி நடந்த தவற்றிற்கு மன்னியுங்கள் உங்களுக்கு வந்த பொருளை நீங்களே வைத்துக்கொள்ளலாம் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
    Non-returnable product- திரும்பப் பெறமுடியாத பொருள்
    விலை உயர்ந்த பொருளாக இருக்கிறது என்று கெளதம் ரீஜ் கூறிய போது, இது "திரும்பப் பெறமுடியாத (non-returnable)" பொருள் என்பதால் பிரீமியம் ஹெட்ஃபோனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். அமேசானின் இந்த முடிவிற்கு, பின்னணியில் ஒரு உண்மை ஒளிந்துள்ளது.
    வைரல் ஆகும் அமேசான் பயனர் ட்வீட்
    இந்த சம்பவம் குறித்து கெளதம் ரீஜ் பதிவு செய்த பதிவிற்கு இதுவரை 21K டிவிட்டர் பயனர்கள் லைக் செய்துள்ளனர். இந்த பதிவை சுமார் 4.1K பயனர்கள் ரீ-ட்வீட் செய்துள்ளனர். அவருடைய டிவிட்டர் பதிவில் ஏராளமான அமேசான் பயனர்கள் தங்களுக்கு நேர்ந்த வினோதமான டெலிவரி அனுபவத்தையும் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பயனர் "அந்த பாடி லோஷன் இன்னும் ஸ்டாக்கில் உள்ளதா? தயவுசெய்து அந்த லோஷனின் இணைப்பை அனுப்புங்கள்" என்று கமெண்ட் செய்துள்ளார்.
    இன்னும் பலருக்கும் அடித்த லக்கி ப்ரைஸ்
    இன்னும் சில பயனர்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளனர், ''என்னிடம் பாடி லோஷன் இருப்பில் இருக்கிறது, உங்களுக்குக் கிடைத்த போஸ் இயர்பட்ஸை நாம் பரிமாறிக்கொள்ளலாம்'' என்று கூறியுள்ளனர். அதேபோல், மற்றொரு பயனர் அமேசானில் ரூ .13,000 மதிப்புள்ள ஒரு மானிட்டரை ஆர்டர் செய்த போது, அவருக்கு கொலின் பாட்டில்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டது என்று எரிச்சலுடன் கூறியுள்ளார்.
    அம்சோனின் போக்கிற்கு பின்னணியில் உள்ள உண்மை
    அதேபோல், மற்றொரு பயனர் ரூ.180 மதிப்பிலான அஃப்டர் ஷேவ் லோஷன் ஆர்டர் செய்திருக்கிறார், ஆனால், அவருக்கு அமேசான் நிறுவனம் லெனோவா டேப் சாதனத்தை டெலிவரி செய்துள்ளது. அந்த மாற்றுப் பொருளையும் மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள நிறுவனம் தயாராக இல்லை என்று கூறியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இத்தகைய போக்கிற்குப் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்று மற்றொரு பயனர் டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.
    இழப்பு இவர்களுக்கு தான் அமசனிற்கு இல்லை
    விலை உயர்ந்த பொருட்களை அமேசான் நிறுவனம் திரும்பப் பெறாமல் தரலாம் காட்டுகிறது என்று நினைத்துவிடாதீர்கள், இந்த பொருட்களைத் தவறாக அனுப்பியது வணிகர்கள் தான், இதன் விளைவு இந்த சாதனங்களை விற்பனை செய்யும் வணிகர்களின் தலையில் தான் சென்றடையும், அமேசான் தளம் மூலம் விற்பனை செய்யும் அந்த குறிப்பிட்ட வணிகருக்குத் தான் இந்த இழப்பு ஏற்படும், ஈ-காமர்ஸ் தளமான அமேசானிற்கு இதனால் எந்த நஷ்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.  

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக