பரோட்டோ ரொட்டி வகைகளில் சேராது என்று கூறி 18 சதவீத வரி விதித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பரோட்டா என்பது தமிழர்களுக்கு
மிகவும் பிடித்த உணவுப் பொருளாகும். தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா மற்றும் தென்னிந்திய
மாநிலங்களில் பரோட்டா மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவாக உள்ளது. இந்நிலையில் பரோட்டாவுக்கு
18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில்
ரொட்டிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே பிரிவைச் சேர்ந்த
பரோட்டாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகமான வரி விதிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இது வைரலாகப் பரவி வருகிறது.
பெங்களூரு வைட்பீல்ட் பகுதியைச் சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட்(ID Fresh Food)என்ற நிறுவனம் தோசை மாவு, பரோட்டா, தயிர், பன்னீர் உள்ளிட்ட உடனுக்குடன் அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கோதுமை பரோட்டா, மலபார் பரோட்டா போன்ற உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பானது ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் அமைப்பாகும். இந்த வழக்கின் தீர்ப்பில் பரோட்டா என்பது, 18 சதவீத வரி விதிக்கப்படும் உயர்தர உணவு வகைகளில் ஒன்று எனவும், அது 5 சதவீத வரி வசூலிக்கப்படும் சப்பாத்தி மற்றும் ரொட்டி வகைகளில் சேராது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய உணவுப் பொருளான ரொட்டிக்கு மட்டும் 5 சதவீத வரி விதித்துவிட்டு, அதே வகையைச் சேர்ந்த பரோட்டாவுக்கு மட்டும் ஏன் 18 சதவீத வரி விதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #handsoffparotta என்ற ஹேஸ்டாக் வைரலாகியுள்ளது. பரோட்டா, ரொட்டி ஆகிய இரண்டுமே மைதா மாவிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைச் சமைக்கும் முறைதான் மாறுபடும். ஆனால் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைப்படி பரோட்டாவுக்கு 18 சதவீத வரி, ரொட்டிக்கு 5 சதவீத வரி என்ற பாகுபாடு ஏன் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக