https://tnepass.tnega.org என்ற வலைதளம்
மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது. தொடர்ந்து வெளி ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பயணிப்பவர்கள் இ-பாஸ் பயன்படுத்துவது கட்டாயம். இபாஸ் https://tnepass.tnega.org என்ற வலைதளத்தில் வாங்கலாம்.
இ பாஸ் பெறுவது எப்படி
தனிநபர் இ பாஸ் பெறுவதற்கு திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கித் தவித்தல் போன்ற சில காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுகிறது என்பது இதில் கவனிக்கத்தக்க விஷயம். தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30 ஆம் தேதி அமலில் உள்ளது.
இ-பாஸ் வாங்காமல் பயணம்
இந்த நிலையில் 19 வயது இளம்பெண், 16 வயது சிறுவன், 25 வயது இளம்பெண், 9 மாத பெண் குழந்தை ஆகிய 4 பேர் சென்னையில் இருந்து இ-பாஸ் வாங்காமல் திருப்பூருக்கு காரில் வந்துள்ளனர்.
சோதனை எடுக்கப்பட வேண்டும்
இதையடுத்து அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் அந்த தொகதி எம்.எல்.ஏவிடம் 4 பேர் சென்னையில் இருந்து வந்திருக்கின்றனர் அவர்களுக்கு சோதனை எடுக்கப்பட வேண்டும் என முறையிட்டுள்ளனர்.
வீட்டிலேயே தனிமைப்பட்டு கண்காணிப்பு
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த 4 பேரையும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின் வீட்டிலேயே தனிமைப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக