அப்படி பல்வேறு ஏழை எளிய மக்கள் பசியோடு இருந்த போது, அவர்கள் பசியை போக்க, உதவிய ஒரு சில உணவுப் பொருட்களில் மிக முக்கியமானவை பிஸ்கெட்டுகள் தான்.
அதிலும் குறிப்பாக Parle G பிஸ்கெட்டுகள் தான். ஏழை எளிய மக்களுக்கு விலை அதிகமான பிஸ்கெட்டுகளை வாங்க ஏது காசு..?
பார்லிஜி
சின்ன வயதில், சக்திமான் ஸ்டிக்கருக்காக பார்லிஜி பிஸ்கெட்களை வாங்கத் தொடங்கிய 90ஸ் கிட்ஸ்களில், பலரும் இன்று வரை பார்லிஜியை தொடர்ந்து வாங்கிக் கொண்டு இருப்போம். அதற்கு விலை ஒரு மிக முக்கிய காரணம். அதன் பிறகு தான் அதன் சுவை, நிறம் எல்லாம். சரி விஷயத்துக்கு வருவோம்.
முரட்டு சாதனை
1938-ம் ஆண்டு முதல், பார்லி ஜி இந்தியாவில் பரிட்சயமான ஒரு பிராண்ட் தான். ஆக பார்லி ஜி பிராண்ட் வந்து சுமார் 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 80 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு, 2020-ம் ஆண்டில், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிக பிஸ்கெட்களை விற்று இருக்கிறார்களாம்.
எண் விவரங்கள் இல்லை.
எவ்வளவு பிஸ்கெட்களை விற்று இருக்கிறார்கள் என்கிற விவரங்களை பார்லி கம்பெனி வெளியிட மறுத்துவிட்டார்களாம். ஆனால் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 3 மாதங்களில் விற்பனை அதிகரித்து இருப்பதை அமோதித்து இருக்கிறார்கள். 8 தசாப்தங்களில் இல்லாத மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது பார்லி கம்பெனி.
5% சந்தை
இந்த பார்லி ஜி பிஸ்கெட்களின் முரட்டு விற்பனையால், இந்தியாவின் ஒட்டு மொத்த பிஸ்கெட் சந்தையில் 5 சதவிகிதத்தை பார்லி கம்பெனி கூடுதலாக கைப்பற்றி இருக்கிறதாம். இதற்கு முழு முதல் காரணம் பார்லி ஜி பிஸ்கெட் தானாம். எண்களில் சொல்ல வேண்டுமானால், கூடுதலாக பிடித்த 5 % பிஸ்கெட் சந்தை வளர்ச்சியில் 80 - 90 % பார்லிஜி பிஸ்கெட் விற்பனையால் வந்தது என்கிறார் பார்லி கம்பெனி அதிகாரி மயங்க் ஷா.
400 மில்லியன் பிஸ்கெட்
சாதாரண நாட்களிலேயே பார்லி கம்பெனி, சுமாராக 400 மில்லியன் (40 கோடி) பார்லி ஜி பிஸ்கெட்களை நாள் ஒன்றுக்கு தயாரிப்பார்களாம். அப்படி என்றால் இந்த லாக் டவுன் காலத்தில் எத்தனை கோடி பிஸ்கெட்களைத் தயாரித்து இருப்பார்கள் என நீங்கள் கணக்கு போட்டுப் பாருங்கள்.
130 ஆலைகளில் உற்பத்தி
அதே போல இந்தியாவில் சுமாராக 130 உற்பத்தி ஆலைகளில் பார்லி கம்பெனியின் பிஸ்கெட்டுகள் தயாரிக்கபடுகிறதாம். அதில் 10 ஆலைகள் மட்டுமே பார்லி கம்பெனிக்கு சொந்தமான தயாரிப்பு கம்பெனிகள். மற்ற 120 உற்பத்தி ஆலைகள் ஒப்பந்த அடிப்படையில் பார்லி பிஸ்கெட்களை தயாரித்துக் கொடுப்பவைகளாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக