கள்ள காதலை துண்டித்து கொண்டதால் பெண்ணை கத்தரிக்கோல் வைத்து குத்தி கொன்றவர் கைது.
சென்னை தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரில் தையல் தைக்கும் தொழில் செய்யும் பெண்மணி தான் யசோதா ராணி. 42 வயதுடைய இவரது கணவர் கார் ஓட்டுநராகவும், பிள்ளைகள் இருவர் IT நிறுவனத்திலும் பணி புரிந்து வருகின்றனர்.
இவரை நேற்று தையல் நிலையத்திற்கு சந்திக்க வந்த ஒருவர், வாக்குவாதப்பட்டு அருகில் இருந்த கத்தரிக்கோலால் குதி உள்ளார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்ணை மருத்துவமனைக்கு அருகிலிருந்தவர்கள் சேர்த்துள்ளனர்.
கொலை செய்த செல்வகுமாரை கண்டறிந்து கைது செய்து விசாரித்ததில் இருவருக்கும் கள்ள காதல் இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடன் பேசுவதை யசோதா ராணி நிறுத்தி விட்டதாகவும், அதனால் தான் கொன்றதாகவும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக